/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/ செப்பறை அழகியகூத்தர் கோவிலில் ஆனிஉத்திர விழா நடன தீபாராதனை செப்பறை அழகியகூத்தர் கோவிலில் ஆனிஉத்திர விழா நடன தீபாராதனை
செப்பறை அழகியகூத்தர் கோவிலில் ஆனிஉத்திர விழா நடன தீபாராதனை
செப்பறை அழகியகூத்தர் கோவிலில் ஆனிஉத்திர விழா நடன தீபாராதனை
செப்பறை அழகியகூத்தர் கோவிலில் ஆனிஉத்திர விழா நடன தீபாராதனை
ADDED : ஜூலை 12, 2024 11:11 PM
திருநெல்வேலி:நெல்லை அருகே ராஜவல்லிபுரம், செப்பறை அழகியகூத்தர் கோவிலில் ஆனிஉத்திர திருமஞ்சன திருவிழா கடந்த 3ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழா 10 நாட்கள் நடந்தது.
ஒவ்வொரு நாளும் கோவிலில் நெல்லையப்பர், காந்திமதி அம்பாள், அழகியகூத்தருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது. 9ம் திருநாளில் அழகியகூத்தர், சிவகாமி அம்பாள் திருத்தேர் வீதியுலா நடந்தது. 10ம் திருநாள், ஆனி உத்திரத்தை முன்னிட்டு நேற்று காலை அழகியகூத்தருக்கு மகா அபிஷேகம், மதியம் நடன தீபாராதனை நடந்தது.
பின்னர் அழகியகூத்தர், சிவகாமி அம்பாள் சப்பரத்தில் எழுந்தருளி மேளதாளத்துடன் கோவிலைச் சுற்றி வலம் வந்தனர். சிவனடியார்கள் திருமுறைப் பாடல்களைப் பாடினர். சுற்றுப்பகுதி மக்கள் திரளாகக் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இரவில் பிற்கால அபிஷேகம், அழகியகூத்தர், சிவகாமி அம்பாள் தாமிரசபைக்கு எழுந்தருளல் நடந்தது.
ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் சாந்திதேவி, ஆய்வாளர் செல்வி, கோவில் பணியாளர்கள், பக்தர்கள் செய்திருந்தனர்.