/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/ மாடு முட்டி டூவீலரில் சென்ற பெண் அதிகாரி காயம் மாடு முட்டி டூவீலரில் சென்ற பெண் அதிகாரி காயம்
மாடு முட்டி டூவீலரில் சென்ற பெண் அதிகாரி காயம்
மாடு முட்டி டூவீலரில் சென்ற பெண் அதிகாரி காயம்
மாடு முட்டி டூவீலரில் சென்ற பெண் அதிகாரி காயம்
ADDED : ஜூன் 25, 2024 10:51 PM
திருநெல்வேலி : திருநெல்வேலி என்.ஜி.ஓ.,யைச் சேர்ந்த பரமசிவன் மனைவி ரங்கா 57. வணிகவரித்துறை அலுவலர். நேற்று முன்தினம் இரவு வாகன சோதனைக்காக வீட்டில் இருந்து டூவீலரில் சென்றார். வனஅலுவலகம் அருகே சென்ற போது ரோட்டில் நின்ற மாடு டூவீலர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டார். தலையில் காயம் ஏற்பட்டது. திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.
கால்நடைகளால் உயிர்ப்பலி
திருநெல்வேலி நீதிமன்றத்தில் கட்டளை நிறைவேற்றும் ஊழியராக பணிபுரிந்த வேலாயுதராஜ் 57, ஜூன் 23 வண்ணார்பேட்டையில் டூவீலரில் சென்ற போது இரண்டு மாடுகள் சண்டையிட்டு அவரை தள்ளியதில் அரசு பஸ்சுக்குள் சிக்கி பலியானார். திருநெல்வேலி மாநகராட்சி பகுதியில் கால்நடைகள் தெருக்களில் திரிவதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன.