/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/ விற்பனைக்கு யானைத் தந்தம் பதுக்கிய 7 பேர் கைது விற்பனைக்கு யானைத் தந்தம் பதுக்கிய 7 பேர் கைது
விற்பனைக்கு யானைத் தந்தம் பதுக்கிய 7 பேர் கைது
விற்பனைக்கு யானைத் தந்தம் பதுக்கிய 7 பேர் கைது
விற்பனைக்கு யானைத் தந்தம் பதுக்கிய 7 பேர் கைது
ADDED : ஜூன் 21, 2024 02:27 AM

திருநெல்வேலி,:களக்காடு அருகே யானைத்தந்தத்தை பதுக்கி விற்பனை செய்ய திட்டமிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருநெல்வேலி மாவட்டம் களக்காடு முண்டந்துறை பாதுகாக்கப்பட்ட புலிகள் காப்பகம் ஆகும். களக்காட்டைச் சேர்ந்த தங்கத்துரை என்பவர் சிதம்பராபுரத்தை சேர்ந்த முத்துகிருஷ்ணன் என்பவருடன் சேர்ந்து தந்தத்தை பதுக்கி வைத்துள்ளார். அதனை ரூ. லட்சக்கணக்கில் விற்பனை செய்ய சிலருடன் சேர்ந்து முயற்சித்துள்ளனர். தகவல் அறிந்த வனத்துறையினர் தந்தம் வாங்க இருப்பதாக கூறி அவர்களிடம் பேசி மடக்கினர்.
இதுதொடர்பாக களக்காடு தங்கதுரை 50, சிதம்பராபுரம் முத்துகிருஷ்ணன் 27, கண்ணன் 44, சரவணகுமார் 43, கிருஷ்ணமூர்த்தி 35, சென்னை அம்பத்தூர் முருகன் 43, திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு நாகராஜ் 54 ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 2 கிலோ 80 கிராம் எடையுள்ள தந்தம் மற்றும் மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.