ADDED : மே 14, 2025 05:01 AM
கடமலைக்குண்டு : கடமலைக்குண்டு அருகே பாலூத்து கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சம் 50, இவரது 2வது மகன் வென்னில் குமார் 20, விழுப்புரத்தில் கூலி வேலை செய்தார். அடிக்கடி ஊருக்கு வந்து தங்கி செல்வார். பின்னர் மீண்டும் வேலைக்கு சென்று விடுவார்.
ஒரு வாரத்திற்கு முன்பு வென்னில்குமார், வினோதினி என்ற பெண்ணை அழைத்து வந்து ஓராண்டுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்துள்ளார்.
தனது மூத்த மகன் மலைச்சாமிக்கு திருமணம் செய்யும் வரை தனிக்குடித்தனம் இருக்க தந்தை லட்சம் அறிவுறுத்தியதை தொடர்ந்து கடமலைக்குண்டு காலனி தெருவில் மார்க்கண்டேயன் வீட்டில் வென்னில்குமார் மனைவியுடன் வாடகைக்கு குடியிருந்தார். மே 12 ல் வென்னில்குமார் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டதாக லட்சத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
மனைவி வினோதியிடம் விசாரித்த போது வென்னில்குமார் தூங்கப் போவதாக சொல்லி கதவை சாத்திக்கொண்டதாகவும், தான் வெளியில் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
சம்பவம் குறித்து லட்சம் புகாரில் கடமலைக்குண்டு போலீசார் விசாரிக்கின்றனர்.