ஆண்டிபட்டி: சக்கம்பட்டி ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் வள்ளி 45, கூலி வேலை செய்து வருகிறார். இவரது மகன் ராஜபாண்டி 24, வேலை எதுவும் செய்யாமல் திருநங்கைகளுடன் பழகி வந்தார். இதனை தாயார் வள்ளி கண்டித்துள்ளார்.
இதில் கோபமடைந்த ராஜபாண்டி யாரிடமும் சொல்லாமல் வீட்டை விட்டு சென்று விட்டார். பல இடங்களில் தேடியும் உறவினர் வீடுகளில் விசாரித்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. வள்ளி புகாரில் ஆண்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.