வாய்க்காலில் இறந்து கிடந்த வாலிபர்
வாய்க்காலில் இறந்து கிடந்த வாலிபர்
வாய்க்காலில் இறந்து கிடந்த வாலிபர்
ADDED : மே 31, 2025 12:40 AM

மூணாறு: மூணாறு அருகே வட்டவடையில் கோவிலூர் பகுதியில், அதே பகுதியைச் சேர்ந்த விஷ்ணு 25, வாய்க்காலில் இறந்து கிடந்தார்.
அப்பகுதியில் கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்து வருவதால், வாய்க்கால் உள்பட நீர் நிலைகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில் அப்பகுதியில் விவசாய பணிகளுக்கு பயன்படுத்தும் வாய்க்காலில் விஷ்ணு இறந்து கிடந்ததை நேற்று காலை பார்த்தனர். கால் தவறி வாய்க்காலில் விழுந்து இருக்கலாம் என கருதப்படுகிறது. தேவிகுளம் போலீசார் விசாரிக்கின்றனர்.