/உள்ளூர் செய்திகள்/தேனி/ நாட்டுக்கோழி வளர்ப்பு பண்ணை அமைக்க விண்ணப்பிக்கலாம் நாட்டுக்கோழி வளர்ப்பு பண்ணை அமைக்க விண்ணப்பிக்கலாம்
நாட்டுக்கோழி வளர்ப்பு பண்ணை அமைக்க விண்ணப்பிக்கலாம்
நாட்டுக்கோழி வளர்ப்பு பண்ணை அமைக்க விண்ணப்பிக்கலாம்
நாட்டுக்கோழி வளர்ப்பு பண்ணை அமைக்க விண்ணப்பிக்கலாம்
ADDED : ஜூன் 19, 2025 03:17 AM
தேனி: நாட்டுக்கோழி வளர்ப்பு பண்ணை அமைக்க 50 சதவீத மானியம் வழங்க உள்ளதால் கிராமப்புறத்தை சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.'' என,கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் கோயில்ராஜா தெரிவித்துள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது: 2025 -- 2026ல் நாட்டுக்கோழி வளர்ப்பில் ஆர்வம் உள்ள 10 விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் நாட்டுக்கோழி பண்ணைகள் நிறுவும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளன. இதில் பயனாளிகளுக்கு கொட்டகை, கட்டுமானம், உபகரணங்கள் வாங்கும் செலவு, 4 மாதங்களுக்கான தீவனச் செலவு என மொத்த செலவில் 50 சதவீத மானியம் ரூ.1 லட்சத்து 65 ஆயிரத்து 625 வழங்கப்படும். மீதமுள்ள 50 சதவீத பங்களிப்பை வங்கி மூலமாகவோ, சொந்தமாகவோ பயனாளி திரட்டவேண்டும். 250 எண்ணிக்கையிலான 4 வார வயதுடைய நாட்டுக்கோழி குஞ்சுகள், மாவட்ட கால்நடை பண்ணையில் 50 சதவீத மானியத்தில் வழங்கப்படும். பயன்பெற விரும்புவோர் கொட்டகை அமைக்க 625 சதுர அடி நிலம் வைத்திருக்க வேண்டும்.
விதவைகள், ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளிகள்,திருநங்கைகளுக்கு முன்னுரிமை.
30 சதவீதம் தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் பயனாளிகளாக இருப்பது அவசியம். விண்ணப்பிக்க விரும்புவோர் ஆதார் நகல், பண்ணை அமையவிருக்கும் இடத்திற்கான சிட்டா, அடங்கல் நகல், 50 சதவீத தொகை அளிப்பதற்கான ஆதார ஆவணங்கள், வங்கி இருப்பு விபரம், வங்கி கடன் ஒப்புதல் விபரம், 3 ஆண்டுகள் பராமரிப்பதற்கான உறுதிமொழி சான்றிதழுடன் அருகில் உள்ள கால்நடை உதவி மருத்துவரிடம் ஜூன் 26க்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார்.