Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/ உலக ஓசோன் தின விழா: கருத்தரங்கம்

உலக ஓசோன் தின விழா: கருத்தரங்கம்

உலக ஓசோன் தின விழா: கருத்தரங்கம்

உலக ஓசோன் தின விழா: கருத்தரங்கம்

ADDED : செப் 18, 2025 06:28 AM


Google News
Latest Tamil News
கூடலுார், : கூடலுாரில் உலக ஓசோன் தின விழா அன்பு அறம் செய் அறக்கட்டளை சார்பில் கொண்டாடப்பட்டது. அறக்கட்டளை தலைவர் அன்புராஜா வரவேற்றார். ஒட்டான்குளம் கண்மாய் கரையில் விவசாயிகளுக்கு பனை மரங்களில் உள்ள நன்மைகள் குறித்து விழிப்புணர்வு வழங்கப்பட்டது.

விவசாயிகளுக்கு மாசுக்கட்டுப்பாடு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் சுகுமார் பனை விதைகள் வழங்கினார். கண்மாய் கரைப்பகுதியில் பனை விதைகள் நடவு செய்யப்பட்டது. முதலமைச்சரின் பசுமைத் தோழர் அப்சானா, தொழில்நுட்ப உதவியாளர் வினோத்குமார், பா.ஜ.. நகரத்தலைவர் சந்தனகுமார், பொறுப்பாளர் முருகேசன், மாவட்ட பொது செயலாளர் முத்துமணி, விவசாயிகள் கலந்து கொண்டனர்.

கருத்தரங்கம் தேனி: உலக ஓசோன் தினத்தை முன்னிட்டு தேனி நாடார் சரஸ்வதி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை, மாவட்ட காலநிலை மாற்ற இயக்கம் இணைந்து 'பருவநிலையை தாங்கும் உட்கட்டமைப்பு' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடத்தினர்.

இடைநிலைக் கல்வி டி.இ.ஓ., சுருளிவேல் தலைமை வகித்தார்.

நலம் மருத்துவமனை நிர்வாக இயக்குநர் டாக்டர் ராஜ்குமார் முன்னிலை வகித்தார். ஓசோன் படலத்தின் முக்கியத்துவம், வனங்களை பாதுகாப்பதின் அவசியம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றி மாணவர்களுக்கு விளக்கப்பட்டது.

வனசரக அலுவலர்கள் செல்வராணி, சிவராம், பள்ளி தலைமை ஆசிரியர் ராமநாதன், பசுமை தோழர் அப்ஷனா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சி.இ.ஓ., நேர்முக உதவியாளர் பெருமாள்சாமி தலைமையில் அலுவலர்கள் கருத்தரங்க ஏற்பாடுகளை செய்திருந்த னர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us