/உள்ளூர் செய்திகள்/தேனி/ உலக புகையிலை எதிர்ப்பு தினம் அனுசரிப்பு உலக புகையிலை எதிர்ப்பு தினம் அனுசரிப்பு
உலக புகையிலை எதிர்ப்பு தினம் அனுசரிப்பு
உலக புகையிலை எதிர்ப்பு தினம் அனுசரிப்பு
உலக புகையிலை எதிர்ப்பு தினம் அனுசரிப்பு
ADDED : ஜூன் 01, 2025 12:26 AM
கம்பம்,: ஒவ்வொரு ஆண்டும் மே 31, உலக புகையிலை எதிர்ப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது. அதன்படி நேற்று மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் புகையிலை எதிர்ப்பு தினம் அனுஷ்டிக்கப்பட்டது.
காமயகவுண்டன்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர் முருகானந்தம், சித்தா டாக்டர் சிராசுதின், சுகாதார ஆய்வாளர்கள் பிரபுராஜ், அன்பு நிதி, தினேஷ், நர்சுகள், பொதுமக்கள் பங்கேற்றனர். புகையிலை பயன்படுத்துவதால் நுரையீரல் , வாய், கன்னம் தொண்டை , குடல், சிறுநீரக புற்று - நோய்கள் ஏற்படும். நுரையீரல் திசு சுருக்கம் , இதய ரத்தக் குழாய்கள், மூளை ரத்த குழாய்களில் அடைப்பு, பக்கவாதம் போன்ற நோய்கள் ஏற்படும். எந்த வடிவத்திலும் புகையிலையை பயன்படுத்த கூடாது என்று சித்தா டாக்டர் சிராசுதீன் ஆலோசனை கூறினார்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற பொதுமக்கள் புகையிலை எதிர்ப்பு உறுதிமொழி எடுத்து கொண்டனர்.