Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/ உலக பல்லுயிர் பெருக்க தின விழிப்புணர்வு

உலக பல்லுயிர் பெருக்க தின விழிப்புணர்வு

உலக பல்லுயிர் பெருக்க தின விழிப்புணர்வு

உலக பல்லுயிர் பெருக்க தின விழிப்புணர்வு

ADDED : மே 25, 2025 05:09 AM


Google News
Latest Tamil News
ஆண்டிபட்டி : உலக பல்லுயிர் பெருக்க தினத்தை முன்னிட்டு திம்மரசநாயக்கனூரில் ஆண்டிபட்டி வனச்சரகம் சார்பில் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

ஆண்டிபட்டி வனச்சரகர் அருள்குமார் தலைமை வகித்தார். பல்லுயிர் பெருக்கத்தில் தாவரங்கள், விலங்குகள், மனிதர்களின் பங்கு குறித்தும் மரம் வளர்ப்பின் அவசியம் குறித்தும் பேசினார். திம்மரசநாயக்கனூர் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளியில் படிக்கும் 250 மாணவர்களுக்கு வனத்துறை சார்பில் 2023ல் நிழல் தரும் மயில் கொன்றை பூ மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

17 மாதங்களில் 250 மரக்கன்றுகளும் வளர்ந்த நிலையில் சிறந்த முறையில் மரங்களாக வளர்த்துள்ள 8 மாணவர்களை தேர்வு செய்து பரிசுகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் வனவர் ராமராஜ், மாவட்ட பசுமை தோழர் அமைப்பு சார்பில் பிரியங்கா, உட்பட ஊர் முக்கிய பிரமுகர்கள் பல கலந்து கொண்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us