/உள்ளூர் செய்திகள்/தேனி/ மாங்காய் விலை இல்லாததால் மாற்றுப்பணி தேடும் தொழிலாளர்கள் மாங்காய் விலை இல்லாததால் மாற்றுப்பணி தேடும் தொழிலாளர்கள்
மாங்காய் விலை இல்லாததால் மாற்றுப்பணி தேடும் தொழிலாளர்கள்
மாங்காய் விலை இல்லாததால் மாற்றுப்பணி தேடும் தொழிலாளர்கள்
மாங்காய் விலை இல்லாததால் மாற்றுப்பணி தேடும் தொழிலாளர்கள்
ADDED : ஜூன் 18, 2025 04:40 AM
பெரியகுளம்: பெரியகுளத்தில் இந்தாண்டு மாங்காய்க்கு விலை இல்லாததால்இதில் ஈடுபட்டிருந்ததொழிலாளர்கள்மாற்று தொழில் தேடிச்சென்றனர்.
பெரியகுளம் தாலுகாவில் 10 ஆயிரம் ஏக்கரில் மா விவசாயம் உள்ளது. இந்தாண்டு பருவமழை மாற்றத்தால் 30 சதவீதம் வரை விளைச்சல் குறைந்தது.
நல்ல விலை கிடைக்கும் என எதிர்பார்த்தனர். இதற்கு மாறாக மாங்காய் வாங்க வியாபாரிகள் முன் வரவில்லை. இதனால் விவசாயிகளுக்கு பலத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
மாங்காய் சீசனைநம்பி பெரியகுளம் தாலுகாவில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் உள்ளனர். மாங்காய்களை அறுவடை செய்வது, தரம் பிரித்தல், பெட்டிகளில் அடுக்குவது, பெட்டிகளை லாரியில் ஏற்றுவது என பத்து வகையான வேலைகளை செய்து வந்தனர்.
தொழிலாளர்களுக்கு தினமும் தலா ரூ.500 முதல் ரூ.700 வரை சம்பளம் கிடைக்கும். சீசன் நாட்களில் 3 மாதங்கள் பெரியகுளம் காலை முதல் இரவு வரை சுறுசுறுப்பாக இயங்கும்.
தற்போது மாங்காய் விலையின்றி விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டதால், தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். துவக்கத்தில் ஒரு மாதம் வரை மாங்காய் விலை ஏறும் என்ற நம்பிக்கையில் விவசாயிகளுக்கு நம்பிக்கை கொடுத்த தொழிலாளர்கள், தொடர்ந்து இரு மாதங்களாக வேலை இன்றி பொருளாதார ரீதியில் சிரமப்பட்டனர். இதனால் பெரும்பாலான தொழிலாளர்கள் கட்டுமானப்பணி, மில் வேலைக்கு சென்றுள்ளனர்.-