ADDED : ஜூன் 27, 2025 05:20 AM
கம்பம்: கம்பம் செல்லாண்டியம்மன் கோயில் தெருவில் வசிப்பவர் முருகன் 45, இவர் லோடு மேனாக பணியாற்றினார்.
நேற்று முன்தினம் மாலையம்மாள்புரத்தில் உள்ள தனியார் தேங்காய் குடோவுனில் லாரியில் லோடு ஏற்றிக் கொண்டிருந்த போது திடீரென மயங்கி விழுந்தார். அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, வழியிலேயே இறந்தார். மனைவி பரமேஸ்வரி புகாரின் பேரில் கம்பம் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


