/உள்ளூர் செய்திகள்/தேனி/ கலெக்டர் ஆபீசில் பெண் தீக்குளிக்க முயற்சி கலெக்டர் ஆபீசில் பெண் தீக்குளிக்க முயற்சி
கலெக்டர் ஆபீசில் பெண் தீக்குளிக்க முயற்சி
கலெக்டர் ஆபீசில் பெண் தீக்குளிக்க முயற்சி
கலெக்டர் ஆபீசில் பெண் தீக்குளிக்க முயற்சி
ADDED : ஜூன் 07, 2025 12:48 AM

தேனி: தேனி கலெக்டர் அலுவலகத்திற்கு மகள், மகனுடன் வந்த பெண் தனது உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றி தற்கொலைக்கு முயற்சித்தார். இவரை போலீசார் காப்பாற்றினர்.
பெரியகுளம் தென்கரை பட்டாளம்மன் கோயில் தெரு பாபு 40. மனைவி முத்துலட்சுமி 37. பாபுவின் பூர்வீக வீட்டை அவரின் தம்பி பிரபு ஆக்கிரமித்துள்ளதாக கூறி 2 குடும்பத்தினர் இடையே முன்விரோதம் இருந்தது. ஜூன் 1ல் பாபு மனைவி முத்துலட்சுமி, கணவரின் பூர்வீக வீட்டின் அருகே நடந்து சென்ற போது கொழுந்தன் பிரபு தாக்க முயற்சித்தார். இதை பாபு தட்டிக்கேட்டார். இதனால் பிரபு, அவரது மனைவி முத்துசெல்வி, மாமியார் பேச்சி ஆகிய மூவரும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். காயமடைந்த பாபு பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பாபு தென்கரை போலீசில் புகார் அளித்தார்.நடவடிக்கை இல்லை.
இதனால் முத்துலட்சுமி தனது மகன், மகளுடன் கலெக்டர் அலுவலகம் வந்தார். நுழைவாயில் முன் ஒரு லிட்டர் கேனில் கொண்டு வந்த மண்ணெண்ணெய் உடலில் ஊற்றி, கொழுந்தன் மீது நடவடிக்கை எடுகக வலியுறுத்தி தற்கொலைக்கு முயன்றார். போலீசார் காப்பாற்றி, தண்ணீர் ஊற்றி 108 ஆம்புலன்ஸ் மூலம் தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக் கின்றனர்.