/உள்ளூர் செய்திகள்/தேனி/ இரவங்கலாறு முதல் சுருளி ஆறு வரை ரோப் கார் வசதி... துவங்கப்படுமா; சுற்றுலா வளர்ச்சித்துறை அனுமதி பெற வலியுறுத்தல் இரவங்கலாறு முதல் சுருளி ஆறு வரை ரோப் கார் வசதி... துவங்கப்படுமா; சுற்றுலா வளர்ச்சித்துறை அனுமதி பெற வலியுறுத்தல்
இரவங்கலாறு முதல் சுருளி ஆறு வரை ரோப் கார் வசதி... துவங்கப்படுமா; சுற்றுலா வளர்ச்சித்துறை அனுமதி பெற வலியுறுத்தல்
இரவங்கலாறு முதல் சுருளி ஆறு வரை ரோப் கார் வசதி... துவங்கப்படுமா; சுற்றுலா வளர்ச்சித்துறை அனுமதி பெற வலியுறுத்தல்
இரவங்கலாறு முதல் சுருளி ஆறு வரை ரோப் கார் வசதி... துவங்கப்படுமா; சுற்றுலா வளர்ச்சித்துறை அனுமதி பெற வலியுறுத்தல்
ADDED : செப் 15, 2025 05:52 AM

மாவட்டத்தில் மேகமலை, மூணாறுக்கு இணையான சர்வதேச அளவில் புகழ்பெற்ற சுற்றுலா தலமாகும். இங்குள்ள ஹைவேவிஸ், மணலாறு, வெண்ணியாறு, இரவங்கலாறு, மகாராஜா மெட்டு, துாவானம் போன்ற பகுதிகளை பார்க்க தினமும் சுற்றுலாப் பயணிகள் நுாற்றுக்கணக்கில் வந்து செல்கின்றனர். மேகமலை பகுதிகளை பார்த்து விட்டு பின்னர் சுருளி அருவிக்கு குளிக்கச் செல்கின்றனர். வனத்துறையின் கட்டுப்பாட்டில் இருப்பதால், கெடுபிடிகள் அதிகம். சுற்றுலாப் பயணிகள் மேகமலை சென்று சின்னமனுார் திரும்ப 100 கி.மீ., பயணிக்க வேண்டும். சின்னமனுாரில் இருந்து உத்தமபாளையம், கம்பம் வழியாக சுருளி அருவிக்கு செல்ல 30 கி.மீ., பயணம் செய்ய வேண்டும். ஆக ஒரு சுற்றுலாப் பயணி மேகமலை பகுதிகளை பார்த்து விட்டு, சுருளி அருவிக்கு செல்ல 130 கி.மீ., பயணம் செய்ய வேண்டும். இரவங்கலாறில் இருந்து சுருளி அருவிக்கு ரோப் கார் அமைத்தால் வெறும் 50 கி.மீ., துாரத்திலேயே மேகமலையையும், சுருளி அருவியையும் பார்த்து விட முடியும். சுமார் 80 கி.மீ., துார பயணம் மிச்சமாகும். மேலும் பயண நேரமும் குறையும். ரோப் கார் பயணத்தில் காடுகளையும், வன உயிரினங்களையும் பார்த்து ரசிக்க முடியும். மேகமலை பகுதிகள் புலிகள் காப்பகமாக இருப்பதால், வனத் துறை அனுமதி கிடைக்காது.
இதனால் பெரியாறு புலிகள் காப்பகத்தில் 'சூழல் சுற்றுலா' என்று கேரள மாநிலத்தில் இருப்பது போன்று, மேகமலை புலிகள் காப்பகத்திலும் ஏற்படுத்தி, வனத்துறையே ரோப் கார் சேவையை துவங்க முன்வர வேண்டும். இதன் மூலம் பயண நேரம் எரிபொருள், போக்குவரத்து நெரிசல் போன்றவைகள் குறையும். இதுகுறித்து சுற்றுலா ஆர்வலர்கள் கூறுகையில், ''மிகவும் பயனுள்ள திட்டம். தேனி மாவட்டத்தில் சுற்றுலாவை மேம்படுத்த இத்திட்டம் மிகவும் அவசியமாகும். மாவட்ட சுற்றுலா வளர்ச்சித்துறை வனத்தறை, அரசிடம் பரிந்துரைக்க வேண்டும்.'', என்றனர்.