டூவீலர் விபத்தில் காட்டுப்பன்றி பலி
டூவீலர் விபத்தில் காட்டுப்பன்றி பலி
டூவீலர் விபத்தில் காட்டுப்பன்றி பலி
ADDED : செப் 22, 2025 03:46 AM
தேவதானப்பட்டி : மஞ்சளாறு அணை ரோட்டில் டூவீலர் மோதிய விபத்தில் காட்டுப்பன்றி பலியானது.
தேவதானப்பட்டி மஞ்சளாறு அணை ரோட்டில், நேற்று முன்தினம் இரவு தேவதானப்பட்டியைச் சேர்ந்த 17 வயது சிறுவர்கள் மூவர், டூவீலரில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது அந்தப் பகுதியில் கடந்து சென்ற காட்டுப்பன்றி மீது டூவீலர் மோதி விபத்து நடந்தது. இதில் காட்டுப் பன்றி இறந்தது. காயமடைந்த மூன்று சிறுவர்கள் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
காட்டுப்பன்றி உடலை வனத்துறை டாக்டர் முத்துராமலிங்கம் பிரேத பரிசோதனை செய்தார். காட்டுப்பன்றி அதே பகுதியில் புதைக்கப்பட்டது. தேவதானப்பட்டி ரேஞ்சர் அன்பழகன் விசாரிக்கிறார்.