Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/ 4 சட்டசபை தொகுதிகளையும் கைப்பற்றுவோம் தேனி மாவட்ட பா.ஜ. பொருளாளர் தகவல்

4 சட்டசபை தொகுதிகளையும் கைப்பற்றுவோம் தேனி மாவட்ட பா.ஜ. பொருளாளர் தகவல்

4 சட்டசபை தொகுதிகளையும் கைப்பற்றுவோம் தேனி மாவட்ட பா.ஜ. பொருளாளர் தகவல்

4 சட்டசபை தொகுதிகளையும் கைப்பற்றுவோம் தேனி மாவட்ட பா.ஜ. பொருளாளர் தகவல்

ADDED : மே 23, 2025 04:34 AM


Google News
Latest Tamil News
சின்னமனூர்: தேனி மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டசபை தொகுதிகளையும் கைப்பற்ற களப்பணியாற்றுவோம் என மாவட்ட பா.ஜ. பொருளாளர் பொன். ஆனந்தன் கூறியுள்ளார்.

சின்னமனூரை சேர்ந்த பொன்.ஆனந்தன் 2008 முதல் 2017 வரை பா.ஜ., தர்ம ரக்சன சமிதியின் மாவட்ட துணை தலைவராகவும், 2019 முதல் 2022 வரை பா.ஜ. வின் ஓ.பி.சி. அணி மாவட்ட பொருளாளராகவும், 2022 முதல் 2025 வரை பா.ஜ. மாநில பொதுக் குழு உறுப்பினராகவும் இருந்துள்ளார். தற்போது தேனி மாவட்ட பா.ஜ. பொருளாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மாவட்ட பொருளாளராக நியமனம் செய்யப்பட்ட பொன் ஆனந்தனை பா.ஜ. மாநில பொதுச் செயலாளர் இராம. சீனிவாசன், மதுரை பெருங் கோட்ட பொறுப்பாளர் கதலி நரசிங்க பெருமாள், மாவட்ட தலைவர் இராஜபாண்டியன், சின்னமனூர் வர்த்தக சங்க தலைவர் உதயகுமார், வர்த்தக சங்க மாநில துணை தலைவர் கே.எஸ். பெருமாள், ஒட்டல் சங்க தலைவர் மனோகரன், பொருளாளர் பிச்சை கணபதி, முன்னாள் இராணுவ வீரர்கள் நலச் சங்க தலைவர் விலங்கையா, நகர் பா.ஜ. தலைவர் சிங்கம், நகர் தலைவர் லோகேந்திரராஜன், பொதுச் செயலாளர் பிரபு, சசிக்குமார், வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழக நிர்வாகிகள், உள்ளிட்ட ஏராளமானோர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். வாழ்த்துக்களை பெற்று பொன். ஆனந்தன் பேசுகையில், 'தமிழகத்தில் 2026 சட்டசபை தேர்தலில் பா.ஜ. நிர்வாகிகளும், தொண்டர்களும் தீவிர களப்பணியாற்றி மாவட்டத்தில் உள்ள நான்கு தொகுதிகளையும் கைப்பற்ற உறுதியேற்போம்,' என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us