/உள்ளூர் செய்திகள்/தேனி/51 இடங்களில் துவங்கியது நீர்வாழ் பறவைகள் கணக்கெடுப்பு: நிலப்பறவைகள் பணிகள் மார்ச் 2ல் துவங்க ஏற்பாடு51 இடங்களில் துவங்கியது நீர்வாழ் பறவைகள் கணக்கெடுப்பு: நிலப்பறவைகள் பணிகள் மார்ச் 2ல் துவங்க ஏற்பாடு
51 இடங்களில் துவங்கியது நீர்வாழ் பறவைகள் கணக்கெடுப்பு: நிலப்பறவைகள் பணிகள் மார்ச் 2ல் துவங்க ஏற்பாடு
51 இடங்களில் துவங்கியது நீர்வாழ் பறவைகள் கணக்கெடுப்பு: நிலப்பறவைகள் பணிகள் மார்ச் 2ல் துவங்க ஏற்பாடு
51 இடங்களில் துவங்கியது நீர்வாழ் பறவைகள் கணக்கெடுப்பு: நிலப்பறவைகள் பணிகள் மார்ச் 2ல் துவங்க ஏற்பாடு
ADDED : ஜன 29, 2024 06:32 AM
நீர் வாழ் கணக்கெடுக்கும் பணிக்கு மாவட்டத்தில் வனத்துறை, மேகமலை புலிகள் காப்பத்தினரால் நேற்று முன்தினம் தனித்தனியாக பயிற்சிகள் வழங்கப்பட்டன. மாவட்ட வனத்துறை அலுவலகத்தில் நடந்த பயிற்சியில் குழுத் தலைவர்கள், தன்னார்வலர்களுக்கு பறவைகள் இனம் காணுதல், குறிப்பெடுத்தல் உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டன. நேற்று தேனி மீறுசமுத்திரம் கண்மாய், பூதிப்புரம் ராஜபூபால சமுத்திரம், பெரியகுளம் தாமரைக்குளம், போடி மீனாட்சிபுரம் கண்மாய், தாடிச்சேரி கண்மாய், சின்னமனுார் செங்குளம், கூடலுார் ஒட்டான்குளம், மயிலாடும்பாறை கோவிலான்குளம் உள்ளிட்ட 51 நீர்நிலைகளில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடந்தது.
பூதிப்புரத்தில் மாவட்ட வன அலுவலர் சமர்த்தா, கூடலுார், கம்பம் பகுதி கண்மாயிகளில் ஸ்ரீவில்லிப்புத்துார் மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் ஆனந்த் ஆகியோர் கணக்கிடும் பணியை பார்வையிட்டனர்.
கணக்கெடுப்பில் வெண்கழுத்து நாரை, கொண்டை நீர் காகம், சாம்பல் கூழை கடா, குருட்டு கொக்கு, பெரியகொக்கு, சாம்பல் நாரை, செந்நாரை, நீர்காகம் உள்ளிட்ட பறவைகளின் எண்ணிக்கை குறிக்கப்பட்டன. இந்த கணக்கெடுப்பு பணியில் கல்லுாரி மாணவர்கள், தன்னார்வலர்கள் என 190 பேர் பங்கேற்றனர். கணக்கெடுப்பு பணியை ஆண்டிப்பட்டி வனசரக அலுவலர் அருள்குமார், பயிற்சி உதவி வனபாதுகாவலர் விவேக் ஒருங்கிணைத்தனர்.
நிலப்பறவைகள் கணக்கெடுப்பு பணி மார்ச் 2, 3 ல் மேற்கொள்ளப்பட உள்ளது என, அதிகாரிகள் தெரிவித்தனர்.