/உள்ளூர் செய்திகள்/தேனி/ ஒரு போக பாசனத்திற்காக வைகை அணையில் நீர் திறப்பு ஒரு போக பாசனத்திற்காக வைகை அணையில் நீர் திறப்பு
ஒரு போக பாசனத்திற்காக வைகை அணையில் நீர் திறப்பு
ஒரு போக பாசனத்திற்காக வைகை அணையில் நீர் திறப்பு
ஒரு போக பாசனத்திற்காக வைகை அணையில் நீர் திறப்பு
ADDED : செப் 19, 2025 02:38 AM

ஆண்டிபட்டி:மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்டங்களில் பெரியாறு பாசன பகுதியில் உள்ள ஒரு போக பாசன நிலங்களுக்கு வைகை அணையில் இருந்து நேற்று தண்ணீர் திறந்து விடப்பட்டது.
பெரியாறு அணையில் இருந்து வரும் நீர் வரத்தால் வைகை அணை நீர்மட்டம் ஆக.14 ல் 69.88 அடி வரை உயர்ந்தது. (மொத்த உயரம் 71 அடி). இந் நிலையில் பெரியாறு பாசனப்பகுதியில் உள்ள ஒரு போக பாசன பரப்பாகிய 85,563 ஏக்கர், திருமங்கலம் பிரதான கால்வாயின் கீழ் உள்ள ஒருபோக பாசன நிலங்கள் 19,439 ஏக்கர் நிலங்களுக்கு வினாடிக்கு 1130 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
நீர் திறப்பு நிகழ்ச்சியில் அமைச்சர் மூர்த்தி, தேனி எம்.பி.,தங்கதமிழ்செல்வன், கலெக்டர்கள் பிரவீன்குமார் (மதுரை), ரஞ்ஜீத் சிங் (தேனி), சரவணன் (திண்டுக்கல்), பெரியாறு வைகை வடி நிலக்கோட்ட நீர்வளத்துறை செயற்பொறியாளர் சிவப்பிரபாகர், வைகை அணை உதவி செயற்பொறியாளர் சேகரன் உட்பட பலர் பங்கேற்றனர்.
நீர்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது: ஒரு லட்சத்து 5002 ஏக்கர் நிலங்களுக்கு வினாடிக்கு 1130 கனஅடி வீதம் 45 நாட்களுக்கு முழுமையாகவும், 75 நாட்களுக்கு முறை வைத்தும் 120 நாட்களுக்கு 8493 மில்லியன் கன அடி நீர் திறந்து விடப்பட வுள்ளது. நீர் திறப்பால் மதுரை மாவட்டத்தில் 98,764 ஏக்கர், திண்டுக்கல் மாவட்டத்தில் 199 ஏக்கர், சிவகங்கை மாவட்டத்தில் 6039 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்றனர்.
நேற்று வைகை அணை நீர்மட்டம் 68.86 அடியாக இருந்தது. அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 825 கன அடி. மதுரை, தேனி, ஆண்டிபட்டி சேடப்பட்டி குடிநீர் திட்டங்களுக்காக வினாடிக்கு 69 கன அடி நீர் வழக்கம்போல் வெளியேற்றப்படுகிறது.