/உள்ளூர் செய்திகள்/தேனி/ பெரியாறு அணையில் நீர் திறப்பு அதிகரிப்பு பெரியாறு அணையில் நீர் திறப்பு அதிகரிப்பு
பெரியாறு அணையில் நீர் திறப்பு அதிகரிப்பு
பெரியாறு அணையில் நீர் திறப்பு அதிகரிப்பு
பெரியாறு அணையில் நீர் திறப்பு அதிகரிப்பு
ADDED : ஜூன் 15, 2025 01:43 AM
கூடலுார்,:தென்மேற்கு பருவ மழை மே 23ல் துவங்கியதும் பெய்த கனமழையால் இந்த அணைக்கு நீர்வரத்து வெகுவாக அதிகரித்து நீர்மட்டம் 130 அடியை கடந்தது. கடந்த ஒரு வாரமாக மழை குறைந்து நீர்வரத்தும் குறைய துவங்கியது.
இந்நிலையில் நேற்று நீர்ப்பிடிப்பு பகுதியான பெரியாறில் 41 மி.மீ., தேக்கடியில் 16.4 மி.மீ., மழை பதிவானது. இதனால் 711 கன அடியாக இருந்த நீர்வரத்து வினாடிக்கு 1190 கன அடியாக அதிகரித்தது. நீர்மட்டம் 128.20 அடியாக இருந்தது. (மொத்த உயரம் 152 அடி). நீர் இருப்பு 4309 மில்லியன் கன அடியாகும்.
தமிழகப் பகுதிக்கு குடிநீர் மற்றும் முதல் போக நெல் சாகுபடிக்காக நீர் திறப்பு 1200 கன அடியில் இருந்து 1622 கன அடியாக அதிகரிக்கப்பட்டது.
இதனால் தேனி மாவட்டம் லோயர்கேம்ப் பெரியாறு நீர் மின் நிலையத்தில் மின் உற்பத்தியும் 146 மெகா வாட்டாக அதிகரிக்கப்பட்டது. நேற்று அவ்வப்போது மழை பெய்ததால் நீர் வரத்து மேலும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.