/உள்ளூர் செய்திகள்/தேனி/குமுளி மலைப்பாதையில் செல்லும் வாகன ஓட்டுனர்களுக்கு எச்சரிக்கை -மழையால் மண்சரிவு அபாயம்குமுளி மலைப்பாதையில் செல்லும் வாகன ஓட்டுனர்களுக்கு எச்சரிக்கை -மழையால் மண்சரிவு அபாயம்
குமுளி மலைப்பாதையில் செல்லும் வாகன ஓட்டுனர்களுக்கு எச்சரிக்கை -மழையால் மண்சரிவு அபாயம்
குமுளி மலைப்பாதையில் செல்லும் வாகன ஓட்டுனர்களுக்கு எச்சரிக்கை -மழையால் மண்சரிவு அபாயம்
குமுளி மலைப்பாதையில் செல்லும் வாகன ஓட்டுனர்களுக்கு எச்சரிக்கை -மழையால் மண்சரிவு அபாயம்
ADDED : ஜன 11, 2024 03:59 AM
கூடலுார், : மழை பெய்து வருவதால் குமுளி மலைப்பாதை வழியாக செல்லும் வாகன ஓட்டுனர்கள் எச்சரிக்கையுடன் வாகனத்தை இயக்க போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
தமிழகத்தையும் கேரளாவையும் இணைக்கும் முக்கிய வழித்தடத்தில் குமுளி மலைப் பாதையும் ஒன்றாகும். இதனால் வாகன போக்குவரத்து அதிகம். தற்போது சபரிமலை மகரஜோதி விழா நடைபெறுவதால் ஐயப்ப பக்தர்கள் வாகனங்கள் அதிகம் இவ்வழியே வருகின்றன.
கூடலுார், குமுளி பகுதியில் நேற்று காலையில் இருந்து மேகமூட்டத்துடன் இருந்தது. மதியம் துவங்கிய மழை தொடர்ந்து இரண்டு மணி நேரத்திற்கு மேல் பெய்தது. குமுளி மலைப்பாதையில் பல ஆபத்தான வளைவுகள் உள்ளன. இப்பகுதியில் சிறு சிறு மண் சரிவுகளும், மரங்கள் சாய்ந்து விழும் வாய்ப்பு உள்ளது. மேலும் மஞ்சு மூட்டத்தால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத வகையில் உள்ளது. அதனால் மலைப் பாதையில் வாகனங்களை ஓட்டிச் செல்லும் டிரைவர்கள் எச்சரிக்கையுடன் செல்லவும், குமுளியில் இருந்து லோயர்கேம்ப் வரும் வாகனங்கள் வேகத்தை குறைத்து வர வேண்டும் எனவும் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.