ADDED : ஜூலை 01, 2025 03:24 AM
தேனி: தேனி கம்மவார் சங்கம் கலை அறிவியல் கல்லுாரி மாணவர்களுக்கு தொழில்நுட்ப கல்வி பயிற்சி அளிக்க தேனி அரசு ஐ.டி.ஐ.,யுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி மாணவர்களுக்கான பயிற்சி துவக்க விழா அரசு ஐ.டி.ஐ.,யில் நடந்தது. கல்லுாரி முதல்வர் வெற்றி வேல் தலைமை வகித்தார். ஐ.டி.ஐ., முதல்வர் சேகரன் முன்னிலை வகித்தார். விழாவில் தொழில் பயிற்சி முக்கியத்துவம் பற்றி மாணவர்களுக்கு விளக்கப்பட்டது.