ADDED : அக் 17, 2025 12:02 AM
தேனி: கண்டமனுார் கிராமத்தை சேர்ந்த அய்யனார், மலைச்சாமி, சிவா ஆத்தங்கரைப்பட்டி பழனிசாமி, நந்தீனீஸ்வரி உள்ளிட்டோர் கலெக்டர் அலுவலகத்தில் வழங்கிய மனுவில், 'கண்டமனுாரில் உள்ள ஆதிதிராவிடர் நல விடுதியை மூடும் நோக்கில் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் செயல்படுகிறார்.
அங்கு தற்போது வெளியூர் மாணவர்கள், பெற்றோரை இழந்த மாணவர்கள் என சுமார் 55 பேர் தங்கி பள்ளி செல்கின்றனர். இந்த விடுதியை தொடர்ந்து இயங்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றிருந்தது.


