/உள்ளூர் செய்திகள்/தேனி/ மனித - வனவிலங்கு மோதலை கட்டுப்படுத்த 'விதுாத்' திட்டம் மனித - வனவிலங்கு மோதலை கட்டுப்படுத்த 'விதுாத்' திட்டம்
மனித - வனவிலங்கு மோதலை கட்டுப்படுத்த 'விதுாத்' திட்டம்
மனித - வனவிலங்கு மோதலை கட்டுப்படுத்த 'விதுாத்' திட்டம்
மனித - வனவிலங்கு மோதலை கட்டுப்படுத்த 'விதுாத்' திட்டம்
ADDED : ஜூன் 25, 2025 07:57 AM
மூணாறு : மனித, வனவிலங்கு மோதலை கட்டுப்படுத்தும் வகையிலான ' விதூத்' திட்டத்தை தேவிகுளம் எம்.எல்.ஏ.ராஜா துவக்கி வைத்தார்.
கேரளாவில் வனங்களை மீட்டெடுத்து, மனித, வனவிலங்கு மோதலை கட்டுப்படுத்தும் வகையில் ' விதூத்' எனும் திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது. அத்திட்டத்தின்படி பல்வேறு மரம், தாவரம் ஆகியவற்றின் விதைகளை கொண்டு விதை பந்துகள் உருவாக்கி வனம், காடு ஆகியவற்றில் தூவப்படுகிறது.அதன்படி மூணாறு வன பிரிவின் கீழ் உள்ள பகுதிகளில் விதை பந்து தூவும் பணி துவங்கியது. அதனை இடமலை குடி ஊராட்சியில் கேப்பைகாடு பகுதியில் தேவிகுளம் எம்.எல்.ஏ. ராஜா துவக்கி வைத்தார். வனத்துறை உயர் அதிகாரி சிபின், மூணாறு பகுதி அதிகாரி பிஜூ உட்பட தன்னார்வலர்கள் பலர் பங்கேற்றனர். மூணாறு வன பிரிவுக்கு உட்பட்ட வனம், காடு ஆகியவற்றில் 15 ஆயிரம் விதை பந்துகள் தூவ வனத்துறை திட்டமிட்டுள்ளது.