/உள்ளூர் செய்திகள்/தேனி/ வெண்டி முத்தையா கோயில் மகா கும்பாபிஷேக விழா வெண்டி முத்தையா கோயில் மகா கும்பாபிஷேக விழா
வெண்டி முத்தையா கோயில் மகா கும்பாபிஷேக விழா
வெண்டி முத்தையா கோயில் மகா கும்பாபிஷேக விழா
வெண்டி முத்தையா கோயில் மகா கும்பாபிஷேக விழா
ADDED : செப் 08, 2025 05:25 AM
சின்னமனுார் : சின்னமனுார் அருகே நுாறு ஆண்டுகள் பழமை வாய்ந்த வெண்டி முத்தையா - மலைச்சாமி கோயில்கள் மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.
சின்னமனுார் கள்ளபட்டியில் இக்கோயில்களில் கடந்த சில மாதங்களாக திருப்பணிகள் நடந்து, முடிந்த நிலையில், மகா கும்பாபிஷேகம் நேற்று காலை நடந்தது. நேற்று முன்தினம் கணபதி ஹோமத்துடன் துவங்கிய நான்கு யாக கால பூஜைகளும் நடந்தது.
விஷ்ணு சகஸ்ரநாமம் சேவித்தல், விஷ்வசேனா பூஜை, வர்ணா கலச பூஜை, வாஸ்து ஹோமம், கும்ப அலங்காரம், துவார பாலகர் பூஜை முடிந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்களை ஓதினார்கள். தொடர்ந்து கடம் புறப்பட்டு கலசத்தின் மீது புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடந்தது. வெண்டி முத்தையாவிற்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. தொடர்ந்து கோயில் வளாகத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப் பட்டது.
உத்தமபாளையம், கம்பம், சின்னமனுார் வட்டாரங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை பிரமலை கள்ளர் சமுதாய கள்ள பட்டி பங்காளிகள் திருப்பணிக்குழு, விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.