/உள்ளூர் செய்திகள்/தேனி/ பள்ளியில் தடகள போட்டி வேலம்மாள் பள்ளி சாம்பியன் பள்ளியில் தடகள போட்டி வேலம்மாள் பள்ளி சாம்பியன்
பள்ளியில் தடகள போட்டி வேலம்மாள் பள்ளி சாம்பியன்
பள்ளியில் தடகள போட்டி வேலம்மாள் பள்ளி சாம்பியன்
பள்ளியில் தடகள போட்டி வேலம்மாள் பள்ளி சாம்பியன்
ADDED : ஜூன் 26, 2025 01:53 AM
தேவதானப்பட்டி: ஸ்ரீ வல்லி வரதராஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி நடத்திய மாவட்ட அளவிலான தடகளப் போட்டியில் வேலம்மாள் பள்ளி கோப்பையை வென்றது.
பெரியகுளம் ஒன்றியம் வரதராஜ் நகர் ஸ்ரீவல்லிவரதராஜ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய விளையாட்டு மைதானத்தை, பள்ளி டிரஸ்டி ரஜினி வரதராஜன் திறந்து வைத்தார்.
ராஜ் ஸ்ரீ சர்க்கரை ஆலை குரூப் முதன்மை தலைவர் ராஜ் ஸ்ரீபதி, இயக்குனர் வரதராஜன் பங்கேற்றனர். இதனை தொடர்ந்து நடந்த தடகளப் போட்டிகளில் மாவட்டத்தில் 28 பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர்.
இப்போட்டிகளில் வேலம்மாள் பள்ளி வெற்றி பெற்று கோப்பையை வென்றது. ஸ்ரீவல்லி வரதராஜ் பள்ளி முதன்மை ஆலோசகர் கிருஷ்ணசாமி, தலைவர் சத்தியமூர்த்தி, தாளாளர் மோகன், முதல்வர் ராஜேந்திர பிரசாத் ஆகியோர் பள்ளி மாணவர்களுக்கு கோப்பையை வழங்கினர். ஆசிரியர்கள், ஆசிரியைகள் பங்கேற்றனர்.