Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/ பயன் இல்லாத கண்காணிப்பு ேகமராக்கள்

பயன் இல்லாத கண்காணிப்பு ேகமராக்கள்

பயன் இல்லாத கண்காணிப்பு ேகமராக்கள்

பயன் இல்லாத கண்காணிப்பு ேகமராக்கள்

ADDED : ஜூன் 08, 2025 05:20 AM


Google News
போடி : போடியில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு ேகமராக்கள் பயன்பாடு இன்றி காட்சி பொருளாக உள்ளன.

போடி நகரில் குற்றச் செயல்கள் நடப்பதை தடுக்கவும், அதில் ஈடுபடும் நபர்களை எளிதில் கண்டறிய போடி பஸ்ஸ்டாண்ட், சார்பதிவாளர் அலுவலக ரோடு, கட்டபொம்மன் சிலை, பரமசிவன் கோயில் ரோடு, ஸ்டேட் பாங்க் ரோடு, பி.ஹைச்., ரோடு, நகைக்கடை பஜார், கருப்பசுவாமி கோயில் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் 10 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.பல ஆயிரம் மதிப்பில் 30 க்கும் மேற்பட்ட சிசிடிவி ேகமராக்கள் பொருத்தப்பட்டன.

சில ஆண்டுகளுக்கு முன்பு காமராஜ் பஜார் மெயின் ரோட்டில் நடந்து சென்ற நகை வியாபாரியிடம் கத்தியை காண்பித்து கொள்ளையர்கள் நகை பறிக்கும் சம்பவம் நடந்தது.

அப்போது இருந்த சிசிடிவி கேமரா மூலம் தெரிந்ததால் குற்றவாளியை போலீசார் எளிதில் கைது செய்ய உதவியாக இருந்தது. அதன் பின் கண்காணிப்பு கேமராக்களை செயல்படுத்த அதிகாரிகள் முன் வராததால் பயன்பாடு இன்றி காட்சி பொருளாக உள்ளன. பலஇடங்களில் கேமராக்கள் சேதம் அடைந்து உள்ளன. இதனால் தற்போது போடி பஸ்ஸ்டாண்ட், கருப்பசுவாமி கோயில் தெரு உள்ளிட்ட பகுதியில் மது விற்பனை உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் நடப்பதை கண்டறிய முடியாமல் போலீசார் தவிக்கின்றனர்.

குற்ற செயல்களை தடுக்கவும், அதில் ஈடுபடுவோரை எளிதில் கண்டறிய சிசிடிவி கேமராக்களை பயன்பாட்டிற்கு கொண்டு வர போடி டி.எஸ்.பி., நடவடிக்கை எடுக்க வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us