/உள்ளூர் செய்திகள்/தேனி/ பாதாள சாக்கடை டெபாசிட் தவணை முறையில் செலுத்தலாம் பாதாள சாக்கடை டெபாசிட் தவணை முறையில் செலுத்தலாம்
பாதாள சாக்கடை டெபாசிட் தவணை முறையில் செலுத்தலாம்
பாதாள சாக்கடை டெபாசிட் தவணை முறையில் செலுத்தலாம்
பாதாள சாக்கடை டெபாசிட் தவணை முறையில் செலுத்தலாம்
ADDED : ஜூன் 08, 2025 06:29 AM
தேனி : தேனி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடைதிட்டடெபாசிட் வைப்புத்தொகையை தவணை முறையில் செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
தேனி நகராட்சியில் சில வார்டுகளில் மட்டும் பாதாள சாக்கடை திட்டம் பயன்பாட்டில் உள்ளது.
பாதாள சாக்கடை இல்லாத பகுதிகளில் ரூ.67.76 கோடியில் புதிய பாதாள சாக்கடை இணைப்பு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நகர்பகுதியில் 13ஆயிரம் புதிய இணைப்புகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
கமிஷனர் ஏகராஜ் கூறுகையில், 'வீடுகளுக்கு புதிய இணைப்புகள் வழங்க வைப்புத்தொகையாக குறைந்த பட்சம் ரூ.5ஆயிரம் முதல் அதிகபட்சம் ரூ.12ஆயிரம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முழுத்தொகையும் செலுத்த முடியாதவர்களுக்கு, தவணை முறையில் வைப்புத்தொகை செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தவணை முறையில் செலுத்த விரும்புபவர்கள் நகராட்சியில் கடிதம் எழுதி வழங்க வேண்டும் என்றார்.