ADDED : ஜூலை 01, 2025 03:25 AM
பெரியகுளம்: பெரியகுளம் அருகே கைலாசபட்டி கூர்மையா கோயில் தெருவைச் சேர்ந்தவர் விஜயகுமார் 43. விவசாய கூலி. நேற்று மதியம் கைலாசபட்டியிலிருந்து தேனி நோக்கி டூவீலரில் சென்றார். கைலாசபட்டி வளைவு பகுதி மீடியனில் டூவீலர் மோதியது. இதில் விஜயகுமார் சம்பவ இடத்திலேயே பலியானார்.
தென்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.