/உள்ளூர் செய்திகள்/தேனி/ கம்பம் அருகே டூவீலர்கள் மோதல்: இரு வாலிபர்கள் பலி கம்பம் அருகே டூவீலர்கள் மோதல்: இரு வாலிபர்கள் பலி
கம்பம் அருகே டூவீலர்கள் மோதல்: இரு வாலிபர்கள் பலி
கம்பம் அருகே டூவீலர்கள் மோதல்: இரு வாலிபர்கள் பலி
கம்பம் அருகே டூவீலர்கள் மோதல்: இரு வாலிபர்கள் பலி
ADDED : மே 31, 2025 12:42 AM
கம்பம்: கம்பம் அருகே நேற்று முன்தினம் இரவு இரண்டு டூவீலர்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இரு வாலிபர்கள் பலியானார்கள்.
கம்பம் அருகே உள்ள சுருளிப்பட்டி வனத்துறை பங்களா தெருவை சேர்ந்தவர் பரமன் மகன் மாயி 20, இதே தெருவை சேர்ந்த இவரது நண்பர் கணேசன் மகன் ஜீவித் 21. இருவரும் நேற்று முன்தினம் இரவு 7:30 மணியளவில் சுருளிப்பட்டியில் இருந்து நாராயணத்தேவன்பட்டிக்கு டூவீலரில் சென்றுள்ளனர். நாரயணத்தேவன்பட்டி கருப்பசாமி கோயில் தெருவை சேர்ந்த குமரன் மகன் பிரவின் 21, தனது டூவீலரில் நாராயணத்தேவன்பட்டியிலிருந்து சுருளிப்பட்டி நோக்கி சென்றுள்ளார்.
நாராயணத்தேவன்பட்டிக்கும் சுருளிப்பட்டிக்கும் இடையே கொட்டை முந்திரி ஆலை அருகே இரண்டு டூவீலர்களும் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் ஜீவித் 21, மற்றும் பிரவின் 21 ஆகியோர் பலியானார்கள். ஜீவித் ஒட்டி வந்த டூவீலரில் பின்பக்கம் அமர்ந்து வந்த மாயி சிறிய காயங்களுடன் உயிர் தப்பினார்.
இறந்த இளைஞர் ஜீவித் கோவையில் உள்ள கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்தார். விபத்து குறித்து இராயப்பன்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.