/உள்ளூர் செய்திகள்/தேனி/ இரண்டு கிலோ கஞ்சா பறிமுதல்: இருவர் கைது இரண்டு கிலோ கஞ்சா பறிமுதல்: இருவர் கைது
இரண்டு கிலோ கஞ்சா பறிமுதல்: இருவர் கைது
இரண்டு கிலோ கஞ்சா பறிமுதல்: இருவர் கைது
இரண்டு கிலோ கஞ்சா பறிமுதல்: இருவர் கைது
ADDED : ஜூன் 02, 2025 12:54 AM
ஆண்டிபட்டி: க.விலக்கு அருகே கட்டைப் பையில் சட்டவிரோத விற்பனைக்காக 2 கிலோ கஞ்சாவை கடத்திய கைலாசபட்டி ஹரி கோபிநாத் 20, கடமலைக்குண்டு சிதம்பர விலக்கு பகுதியைச் சேர்ந்த ஆதிகேசவன் 20, ஆகிய 2 வாலிபர்களை கைது செய்தனர்.
க.விலக்கு அருகே கஞ்சா கடத்தப்படுவதாக கிடைத்த தகவலை தொடர்ந்து கடமலைக்குண்டு எஸ்.ஐ., பிரேம் ஆனந்த், போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்றனர்.
கரட்டுப்பட்டி டாஸ்மாக் கடை அருகே சந்தேகப்படும்படி சென்ற இரு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் 2 கிலோ எடை கொண்ட கஞ்சாவை கட்டைப் பையில் விற்பனைக்காக கொண்டு சென்றது தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் இருசக்கர வாகனத்தில் கஞ்சா கொண்டு வந்த கைலாசபட்டியை சேர்ந்த ஹரி கோபிநாத் 20, கடமலைக்குண்டு சிதம்பர விலக்கு பகுதியைச் சேர்ந்த ஆதிகேசவன் 20, இருவரையும் கைது செய்தனர்.
கஞ்சா எங்கிருந்து கொண்டுவரப்பட்டது, இதில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.