ADDED : ஜூன் 17, 2025 06:58 AM
போடி; போடி அருகே ராசிங்காபுரம் கீழப்பட்டியை சேர்ந்தவர் சேகர் 56, சில்லமரத்துப்பட்டி தீரன் சின்னமலை தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன் 54.
இவர்கள் இருவரும் அனுமதி இன்றி விற்பனை செய்வதற்காக மது பாட்டில்களை பதுக்கி வைத்து இருந்தனர். போடி தாலுகா போலீசார் இருவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த 10 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.