/உள்ளூர் செய்திகள்/தேனி/ ஓணம் விடுமுறையில் பயணிகள் வருகை மூணாறில் போக்குவரத்து நெரிசல் ஓணம் விடுமுறையில் பயணிகள் வருகை மூணாறில் போக்குவரத்து நெரிசல்
ஓணம் விடுமுறையில் பயணிகள் வருகை மூணாறில் போக்குவரத்து நெரிசல்
ஓணம் விடுமுறையில் பயணிகள் வருகை மூணாறில் போக்குவரத்து நெரிசல்
ஓணம் விடுமுறையில் பயணிகள் வருகை மூணாறில் போக்குவரத்து நெரிசல்
ADDED : செப் 07, 2025 03:38 AM

மூணாறு: ணாறில் ஓணம் பண்டிகை விடுமுறையை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்ததால் போக்குவரத்து நெரிசல் கடுமையாக ஏற்பட்டது.
கேரளாவில் செப்.5ல் ஓணம் கொண்டாடப்பட்ட நிலையில், செப்.4 முதல் தொடர் விடுமுறை நாட்களாக அமைந்தது.
பொதுவாக ஓணம் நாளில் சுற்றுலா செல்வதை பெரும்பாலானோர் தவிர்த்து விட்டு, மறுநாள் குடும்பத்தினருடன் சுற்றுலா செல்வதுண்டு.
அதன்படி மூணாறில் நேற்று முன்தினம் சற்று மழை பெய்த நிலையில் பயணிகள் வருகை வெகுவாக குறைந்தது. நேற்று மழை சற்று குறைந்த நிலையில் பயணிகள் வருகை அதிகரித்தது.
மூணாறு நகர், மாட்டுபட்டி, எக்கோ பாய்ண்ட், கொச்சி- தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை, மூணாறு - உடுமலைபேட்டை ரோட்டில் ராஜமலைக்கு செல்லும் நுழைவு பகுதியான 5ம் மைல், லக்கம் நீர்வீழ்ச்சி உட்பட அனைத்து சுற்றுலா பகுதிகளிலும் போக்குவரத்து நெரிசல் கடுமையாக ஏற்பட்டது.
வாகனங்கள் ஊர்ந்து செல்ல நேரிட்டதால் பல கி.மீ., தொலைவுக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. அதில் சிக்கி சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் ஆகியோர் கடும் அவதியுற்றனர்.