/உள்ளூர் செய்திகள்/தேனி/ முன்கூட்டியே துவங்கிய பருவமழை நீர்வரத்தால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி முன்கூட்டியே துவங்கிய பருவமழை நீர்வரத்தால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
முன்கூட்டியே துவங்கிய பருவமழை நீர்வரத்தால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
முன்கூட்டியே துவங்கிய பருவமழை நீர்வரத்தால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
முன்கூட்டியே துவங்கிய பருவமழை நீர்வரத்தால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
ADDED : ஜூன் 04, 2025 01:21 AM

மூணாறு: பருவ மழை வழக்கத்தை விட முன்கூட்டியே துவங்கியதால், நீர்வீழ்ச்சிகளிலும் முன்கூட்டியே நீர்வரத்து காணப்படுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கேரளாவில் ஆண்டு தோறும் தென்மேற்கு பருவ மழை ஜூனில் துவங்குவது இயல்பு.
கடந்தாண்டு மே 28ல் துவங்கிய நிலையில், இந்தாண்டு முன்னதாக மே 24ல் துவங்கியது. ஆரம்பத்திலேயே ஒரு வாரம் கன மழையாக கொட்டித் தீர்த்தது.
மூணாறில் பிற பகுதிகளை விட மழை அதிகரித்து. பொதுவாக ஜூனில் பருவ மழை துவங்கும்போது படிப்படியாக தீவிரமடையும்.
அதற்கு ஏற்ப நீர்நிலைகளில் நீர்மட்டம் உயரும். அது போன்று நீர்வீழ்ச்சிகளிலும் நீர்வரத்து காணப்படும். இந்தாண்டு வழக்கத்தை விட முன்கூட்டியே பருவ மழை துவங்கியதால், நீர்வீழ்ச்சிகளிலும் முன்கூட்டியே நீர்வரத்து காணப்படுகிறது.
மகிழ்ச்சி: இடுக்கி மாவட்டத்தில் சுற்றுலாவுக்கு விடுக்கப்பட்ட தடை வாபஸ் பெறப்பட்ட போதும் படகு சவாரி உள்பட நீர்நிலை சுற்றுலா, டிரெக்கிங் உள்பட சாகச சுற்றுலா ஆகியவற்றின் தடை உத்தரவு நீடிக்கிறது.
அதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்து வரும் நிலையில் நீர்வீழ்ச்சிகள் சற்று ஆறுதல் அளிப்பதால் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.