/உள்ளூர் செய்திகள்/தேனி/ மாட்டுபட்டியில் யானைகளை ரசித்த சுற்றுலா பயணிகள் மாட்டுபட்டியில் யானைகளை ரசித்த சுற்றுலா பயணிகள்
மாட்டுபட்டியில் யானைகளை ரசித்த சுற்றுலா பயணிகள்
மாட்டுபட்டியில் யானைகளை ரசித்த சுற்றுலா பயணிகள்
மாட்டுபட்டியில் யானைகளை ரசித்த சுற்றுலா பயணிகள்
ADDED : செப் 10, 2025 02:27 AM

மூணாறு : மாட்டுபட்டி அணையின் கரையோரம் முகாமிட்ட காட்டு யானைகளை படகுகளில் பயணம் செய்தவாறு சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர்.
மூணாறு அருகில் உள்ள மாட்டுபட்டி அணை முக்கிய சுற்றுலா பகுதியாகும். மாட்டுபட்டி பகுதியில் உள்ள அரசு சார்பிலான மாட்டு பண்ணைக்கு அணையின் கரையோரமும், பண்ணையை சுற்றிலும் 600 எக்டேரில் புல் வளர்க்கப்படுகிறது. தற்போது பருவ மழையில் மூலம் புல் நன்கு வளர்ந்து பசுமையாக தோற்றமளிக்கிறது. அவை காட்டு யானைகளுக்கு நன்கு தீவனம் என்பதால், நாள் கணக்கில் யானைகள் முகாமிட்டு வருகின்றன. கடந்த ஒரு வாரமாக நான்கு யானைகள் புல் மேடுகளில் தீவனத்தை தின்றவாறு நடமாடின. நேற்று இரண்டு யானைகள் மட்டும் காணப்பட்ட நிலையில், அவை தீவனத்திற்கு பிறகு தண்ணீர் அருந்த அணையின் கரையோரம் சென்றன. வெகு நேரம் கரையோரம் முகாமிட்ட யானைகளை சுற்றுலா படகுகளில் பயணம் செய்தவாறு பயணிகள் பார்த்து ரசித்தனர்.