/உள்ளூர் செய்திகள்/தேனி/ சின்னச் சுருளி அருவியில் பயணிகள் குளிக்க தடை சின்னச் சுருளி அருவியில் பயணிகள் குளிக்க தடை
சின்னச் சுருளி அருவியில் பயணிகள் குளிக்க தடை
சின்னச் சுருளி அருவியில் பயணிகள் குளிக்க தடை
சின்னச் சுருளி அருவியில் பயணிகள் குளிக்க தடை
ADDED : மே 26, 2025 02:48 AM
கடமலைக்குண்டு: வருஷநாடு அருகே மேற்கு தொடர்ச்சி மலை கோம்பைத்தொழு கிராமத்தை அடுத்துள்ளது சின்னச்சுருளி அருவி. தேனி உட்பட வெளி மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.
சில வாரங்களுக்கு முன் அருவி அருகே உள்ள பள்ளத்தில் குளித்த சிறுவன் நீரில் மூழ்கி இறந்தான். இதனைத் தொடர்ந்து மேகமலை சின்னச் சுருளி அருவியில் பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து கேள்வி எழுந்தது. வனத்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதி செய்யும் வரை அருவியில் குளிக்க தடை வித்தனர். இரு வாரங்களை கடந்தும் வனத்துறையினர் விதித்த தடை தொடர்கிறது. தற்போது நிலவும் குளிர்ச்சியான சீதோஷ்ண சூழலை அனுபவிக்க சுற்றுலா வரும் பயணிகளுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்துவதாக உள்ளது. ஆர்வத்துடன் வரும் சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர். பாதுகாப்பு நடவடிக்கைகளை விரைந்து முடிக்கவும், சுற்றுலாப் பயணிகளை அருவியில் குளிப்பதற்கு வனத்துறையினர் விரைவில் அனுமதிக்க வேண்டும் என பலரும் எதிர்ப்பார்க்கின்றனர்.