/உள்ளூர் செய்திகள்/தேனி/ கடந்தாண்டு ஆகஸ்டை விட இந்தாண்டு மழை குறைவு கடந்தாண்டு ஆகஸ்டை விட இந்தாண்டு மழை குறைவு
கடந்தாண்டு ஆகஸ்டை விட இந்தாண்டு மழை குறைவு
கடந்தாண்டு ஆகஸ்டை விட இந்தாண்டு மழை குறைவு
கடந்தாண்டு ஆகஸ்டை விட இந்தாண்டு மழை குறைவு
ADDED : செப் 09, 2025 04:44 AM
தேனி: மாவட்டத்தில் 2024 ஆக.,ல் பெய்த மழை அளவை விட இந்தாண்டு குறைவாக பதிவாகி உள்ளது. கடந்தாண்டை ஒப்பிடுகையில் ஏப்ரல் தவிர மற்ற அனைத்து மாதங்களிலும் மழை குறைவாக பெய்துள்ளது.
மாவட்டத்தில் பொழியும் மழை அளவை பதிவிட ஆண்டிபட்டி, அரண்மனைப்புதுார், பெரியகுளம், வீரபாண்டி, போடி, கூடலுார், உத்தமபாளையம், வைகை அணை, சோத்துப்பாறை அணை, தேக்கடி, மஞ்சளாறு அணை, சண்முகாநதிஅணை, முல்லைப்பெரியாறு ஆகிய 13 இடங்களில் மழைமானி வைத்து கண்காணிக்கப்படுகிறது.
ஓராண்டிற்கு முன் புதிதாக 26 இடங்களில் தானியங்கி மழைமானி, ஒரு வானிலைமானி அமைக்கப்பட்டது. ஆனால், அவை இதுவரை பயன்பாட்டிற்கு வரவில்லை.
மாவட்டத்தில் கடந்த ஆகஸ்டில் 603.5 மி.மீ., மழை பதிவாகி உள்ளது. அதிகபட்சமாக முல்லைப்பெரியாறு அணையில் 237.6 மி.மீ., தேக்கடியில் 130 மி.மீ., மழை பதிவாகி உள்ளது. குறைந்தபட்சமாக அரண்மனைப்புதுாரில் 4.4 மி.மீ., பதிவானது. கடந்தாண்டு ஆகஸ்டில் 1652 மி.மீ., மழை பதிவாகி இருந்தது. கடந்தாண்ட ஒப்பிடுகையில் 2025 ஏப்ரலில் மட்டும் கூடுதலாக மழை பெய்துள்ளது. மற்ற மாதங்களில் கூடுதல் மழைப்பொழிவு இல்லை.