/உள்ளூர் செய்திகள்/தேனி/ குரங்கின் கருப்பையில் உயிரிழந்த சிசு ஆப்பரேஷன் மூலம் அகற்றம் தேனி கால்நடை மருத்துவக் கல்லுாரி சாதனை குரங்கின் கருப்பையில் உயிரிழந்த சிசு ஆப்பரேஷன் மூலம் அகற்றம் தேனி கால்நடை மருத்துவக் கல்லுாரி சாதனை
குரங்கின் கருப்பையில் உயிரிழந்த சிசு ஆப்பரேஷன் மூலம் அகற்றம் தேனி கால்நடை மருத்துவக் கல்லுாரி சாதனை
குரங்கின் கருப்பையில் உயிரிழந்த சிசு ஆப்பரேஷன் மூலம் அகற்றம் தேனி கால்நடை மருத்துவக் கல்லுாரி சாதனை
குரங்கின் கருப்பையில் உயிரிழந்த சிசு ஆப்பரேஷன் மூலம் அகற்றம் தேனி கால்நடை மருத்துவக் கல்லுாரி சாதனை
ADDED : ஜூன் 04, 2025 01:16 AM

தேனி: தேனியில் கருவுற்ற குரங்கின் கருப்பையில் இறந்த சிசுவை ஆப்பரேஷன் மூலம் அகற்றி தப்புக்குண்டு கால்நடை மருத்துவக் கல்லுாரி, ஆராய்ச்சி நிலைய பேராசிரியர்கள் சாதனை படைத்துள்ளனர்.
சின்னமனுார் பகுதியில் கருவுற்ற குரங்கு மயங்கிய நிலையில் இருந்தது. இதனை வனக்காப்பாளர்கள் மீட்டு, கால்நடை டாக்டர் வினோத்திடம் ஒப்படைத்தனர். அவர் குரங்கை பரிசோதனை செய்த போது, குரங்கு சுயநினைவு இன்றி இருந்ததால் தேனி கால்நடை மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு பரிந்துரைத்தார். கல்லுாரி முதல்வர் பொன்னுதுரை மேற்பார்வையில், அறுவை சிகிச்சைத்துறை தலைவர் டாக்டர்கள் கோகுலகிருஷ்ணன்,செந்தில்குமார், அருண், செளபரண்யா இணைந்து முதலுதவி அளித்தனர்.
குரங்கு மின்சாரம் தாக்கியதில் மயக்கம் அடைந்திருப்பதை உறுதி செய்து ஆக்சிஜன், திரவ சிகிச்சை அளித்து இதயத்தின் செயல்பாட்டினை சீரமைத்தனர். குரங்கு சுயநினைவுக்கு திரும்பியது. பின் மீயொலி நோட்டம் தொழில்நுட்பம்' மூலம் கருவுற்ற குரங்கின் வயிற்றில் சிசு உயிரிழந்ததை கண்டறிந்தனர். தாய் குரங்கிற்கு அறுவை சிகிச்சையின் போது ஆபத்து உள்ளதால், அறுவை சிகிச்சைக்கு செய்ய மண்டல வன பாதுகாவலரிடம் ஒப்புதல் பெற்று ஆப்பரேஷன் நடந்தது.
கல்லுாரி முதல்வர் பொன்னுதுரை கூறுகையில், 'குரங்கு ஓரிரு நாட்களில் குணமடைந்த பின், பராமரிப்பு செய்து, வனத்தில் விட அறிவுறுத்தி உள்ளோம். அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பெண் குரங்கு எதிர்காலத்தில் கருவுருவதில் எவ்வித இடையூறும் இருக்காது,' என்றார்.