/உள்ளூர் செய்திகள்/தேனி/ சேதமடைந்த சாக்கடையால் தெருவில் சுகாதாரக்கேடு தேனி நகராட்சி 19வது வார்டில் அடிப்படை வசதிகள் இன்றி தவிப்பு சேதமடைந்த சாக்கடையால் தெருவில் சுகாதாரக்கேடு தேனி நகராட்சி 19வது வார்டில் அடிப்படை வசதிகள் இன்றி தவிப்பு
சேதமடைந்த சாக்கடையால் தெருவில் சுகாதாரக்கேடு தேனி நகராட்சி 19வது வார்டில் அடிப்படை வசதிகள் இன்றி தவிப்பு
சேதமடைந்த சாக்கடையால் தெருவில் சுகாதாரக்கேடு தேனி நகராட்சி 19வது வார்டில் அடிப்படை வசதிகள் இன்றி தவிப்பு
சேதமடைந்த சாக்கடையால் தெருவில் சுகாதாரக்கேடு தேனி நகராட்சி 19வது வார்டில் அடிப்படை வசதிகள் இன்றி தவிப்பு

தேங்கும் கழிவு நீரால் பாதிப்பு
ஜமுனாராணி, பெரியார் தெரு, தேனி : பல இடங்களில் மெயின் தெருவை விட குறுக்குத்தெருக்கள் பள்ளமாக உள்ளது. இணைப்பு பாலத்தின் உட்பகுதியில் மண் அதிகம் சேர்ந்ததால் சாக்கடை கழிவு நீர் செல்ல வழியின்றி உள்ளது. கழிவு நீர் தேங்கி உள்ளது. சில நேரங்களில் சாக்கடை மண்ணை எடுத்து அருகிலேயே விட்டு செல்கின்றனர். அவை மீண்டும் சாக்கடையில் விழுந்து பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்த தெருவில் பாதாள சாக்கடை சுத்தம் செய்ய வந்த வாகனம் சாக்கடையை உடைத்து சென்றது. சாக்கடையை சீரமைத்து தர நகராட்சியில் கூறினாலும் எந்த நடவடிக்கையும் இல்லை. சாக்கடை மாத கணக்கில் தேங்குவதால் அதில் உற்பத்தியாகும் புழுக்கள் வீடுகளுக்குள் உட்புகுகின்றன. இதனால் குடியிருப்போர் பல்வேறு நோய்களல் பாதிக்கப்படுகிறோம்.
எலித்தொல்லையால் அவதி
மகேஸ்வரன், பெரியார் தெரு, தேனி :தெருவில் பல இடங்களில் எலிகள் ரோட்டினை சேதப்படுத்தி உள்ளன. இதனால் தெருவில் பல இடங்களில் எலி வலைகளாக காணப்படுகிறது.
புதிய சாக்கடை அமைக்க நடவடிக்கை
நாராயணபாண்டியன், வார்டு கவுன்சிலர் : பெரியார் தெருவில் புதிய சாக்கடை அமைக்க டெண்டர் விடப்பட்டுள்ளது. அதற்காக நகராட்சி உதவி பொறியாளர் தலைமையில் அளவீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டி பயன்பாட்டிற்கு வருவதில் இருதரப்பு இடையே பிரச்னை உள்ளது. அதனை சரி செய்தால் ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இருதரப்பு பிரச்னை சரிசெய்யப்பட்டு, பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டிகள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.