/உள்ளூர் செய்திகள்/தேனி/ தேனி பிஸ்னஸ் போரத்தின் கருத்தரங்கம், பார்வையாளர்கள் கூட்டம் தேனி பிஸ்னஸ் போரத்தின் கருத்தரங்கம், பார்வையாளர்கள் கூட்டம்
தேனி பிஸ்னஸ் போரத்தின் கருத்தரங்கம், பார்வையாளர்கள் கூட்டம்
தேனி பிஸ்னஸ் போரத்தின் கருத்தரங்கம், பார்வையாளர்கள் கூட்டம்
தேனி பிஸ்னஸ் போரத்தின் கருத்தரங்கம், பார்வையாளர்கள் கூட்டம்
UPDATED : மே 26, 2025 03:12 AM
ADDED : மே 26, 2025 02:50 AM
தேனி: தேனி பிஸ்னஸ் போரத்தின் வியாபார வளர்ச்சி குறித்த கருத்தரங்கம், மெகா பார்வையாளர்கள் கூட்டம் தேனியில் நடந்தது. போரத்தின் நிறுவனர் மாஸ்டர் சேப்டி முத்து செந்தில் தலைமை வகித்தார். பட்டய தலைவர் பால்பாண்டி, தலைவர் பிரதீப் செல்லதுரை, செயலாளர் ஆனந்த்பாபு, பொருளாளர் ராமநாதன் முன்னிலை வகித்தனர். தேனி ஆனந்தம் ஜவுளி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் நடராஜன், தேனி குருகிருஷ்ணா மில்ஸ் நிர்வாக இயக்குநர் லட்சுமிராஜ் ஆகியோருக்கு நினைவு பரிசுகள் வழங்கி, கவுரவிக்கப்பட்டனர்.
கருத்தரங்கில் போரத்தின் உறுப்பினர்கள் தொழில் வளர்ச்சி, போரத்தின் செயல்பாடுகள், ஒருங்கிணைப்பு பற்றி கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர். முன்னாள் தலைவர்கள் வைகை ஆப்டிக்கல் வெங்கடேஷ், ஜெய் மார்க்கெட்டிங் அருண்குமார், சிவக்குமார், முட்டை நிலையம் அருண்குமார், ஜோதிடர் பாலகிருஷ்ணன், உறுப்பினர்களின் ஒருங்கிணைப்பாளர் ஜி டெக் கம்யூட்டர் சரவணன், அரங்க ஒருங்கிணைப்பாளர் ஆர்.ஓ., வாட்டர் ராஜா முகமது, ரியல் எஸ்டேட் விஜய்குமார், யுவி ஹோம் கேர் செல்வராஜ், அணி நிர்வாகிகள் கணேசன், ரெங்கராஜன், முத்துக்குமார், அரசமணிகண்டன், வினோத்குமார், பிரகாஷ், பெத்தனராஜன், வி டூ வெங்கடேஷ், அருண்பாண்டியன், தினேஷ், விக்னேஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.