ADDED : ஜூன் 17, 2025 06:57 AM
ஆண்டிபட்டி; கீ.காமாட்சிபுரத்தை சேர்ந்தவர் பால்கனி 43, இவரது மகள் மகாலட்சுமி 20, கோத்தலூத்து அருகே தனியார் பெட்ரோல் பல்க்கில் வேலை பார்த்து வந்தவர் குடும்ப சூழல் காரணமாக வேலைக்கு செல்லவில்லை.
இந்நிலையில் மூன்று நாட்களுக்கு முன் மகாலட்சுமி ஆண்டிபட்டியில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு சென்று வருவதாக கூறி சென்றவர் திரும்ப வரவில்லை. பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. தந்தை பால்கனி புகாரில் ராஜதானி போலீசார் விசாரிக்கின்றனர்.