Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/கஞ்சா கடத்தலில் சிறுவர்கள், மாணவர்களை பயன்படுத்துவது அதிகரிப்பு ; பணம், போதைக்கு ஆசைப்பட்டு பாதைமாறும் இளைஞர்கள்

கஞ்சா கடத்தலில் சிறுவர்கள், மாணவர்களை பயன்படுத்துவது அதிகரிப்பு ; பணம், போதைக்கு ஆசைப்பட்டு பாதைமாறும் இளைஞர்கள்

கஞ்சா கடத்தலில் சிறுவர்கள், மாணவர்களை பயன்படுத்துவது அதிகரிப்பு ; பணம், போதைக்கு ஆசைப்பட்டு பாதைமாறும் இளைஞர்கள்

கஞ்சா கடத்தலில் சிறுவர்கள், மாணவர்களை பயன்படுத்துவது அதிகரிப்பு ; பணம், போதைக்கு ஆசைப்பட்டு பாதைமாறும் இளைஞர்கள்

ADDED : அக் 23, 2025 04:35 AM


Google News
மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையடிவாரங்களில் பல ஆண்டுகளுக்கு முன் கஞ்சா சாகுபடி இருந்தது. தற்போது கஞ்சா சாகுபடி ஒழிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதன் பயன்பாடு அதிகரித்துள்ளது.

மாவட்டத்திற்கு ஆந்திரா, ஒடிசா மாநிலங்களில் இருந்து கஞ்சா கடத்தி வந்து விற்பனை செய்வது அதிகரித்துள்ளது. கடந்த 3 மாதங்களில் கஞ்சா கடத்தல், விற்பனையில் ஈடுபட்ட 18 வயதிற்கு உட்பட்ட பள்ளி, கல்லுாரி இடைநின்ற 4 மாணவர்கள் கைதாகி உள்ளனர்.

முடங்கிய திட்டம் சில ஆண்டுகளுக்கு முன்கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டவர்கள் இரும்பு கரம் கொண்டு ஒடுக்கி, குண்டர்சட்டத்தில் கைது, அவர்களின் சொத்துக்கள், வங்கி கணக்குகள் முடக்கப்பட்டது. வெளி மாநிலங்களில் கஞ்சா சப்ளை செய்தவர்களை அங்கு தேடி சென்று கைது செய்து இங்கே சிறையில் அடைத்தனர். அந்த நடவடிக்கை தற்போது முடங்கி விட்டது.

மேலும் முன்பு கஞ்சா விற்பனை, கடத்தலில் கைதானவர்கள், அவர்களின் அலைபேசி எண்களை போலீசார் தொடர் கண்காணிப்பில் வைத்துள்ளனர். தற்போது பெயரளவில் 5 கிராம், 10 கிராம் கஞ்சா கடத்தியதாக வழக்கு பதிந்து கைது செய்து கணக்கு காட்டுகின்றனர்.

கஞ்சா வியாபாரத்தில் கோலோச்சும் சமூக விரோதிகள் தற்போது புது டெக்னிக்காக பள்ளி, கல்லுாரி இடைநின்ற மாணவர்கள் மூலம் கஞ்சா கடத்தலில் ஈடுபட துவங்கி உள்ளனர்.

இதனால் 15 முதல்17 வயதிற்குட்பட்ட சிறுவர்கள், 25 வயதிற்குட்பட்ட இளைஞர்கள் பணம், கஞ்சாவிற்காக கடத்தலில் ஈடுபடுகின்றனர்.

பெற்றோர் கண்காணிப்பு அவசியம் போலீசார் கூறுகையில், மாவட்டத்தில் கஞ்சா விற்பனை தடுக்கப்பட்டு வருகிறது. கஞ்சா விற்பனை செய்வோர் புதிதாக இளைஞர்களுக்கு கஞ்சா கடத்தி வர இளைஞர்களிடம் ஆசை வார்த்தை கூறி வசப்படுத்துகின்றனர்.

ஒருமுறை சென்று வந்தால் ரூ.10 ஆயிரம், போதை பொருட்கள் கிடைக்கும் என்கின்றனர். இதற்கு உடன்படுபவர்களை ஒடிசாவில் இருந்து கஞ்சா வாங்கி ஆந்திரா வழியாக சேலம், திருப்பூர் வரவழைக்கின்றனர்.

அங்கிருந்து பஸ், கார்கள், டூவீலர்கள் மூலம் மாவட்டத்திற்குள் கடத்தி வருகின்றனர். புழக்கத்தில் உள்ள வியாபாரிகள் அலைபேசி சிக்னல்களை வைத்து சிலரை கைது செய்கிறோம்.

வீட்டில் பள்ளி, கல்லுாரி மாணவர்கள், இளைஞர்களை பெற்றோர்களும் கண்காணிப்பது அவசியமாகும்.

மாணவர்கள், இளைஞர்களை தவறான பாதையில் வழிநடத்துபவர்களை கைது செய்ய நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம் என்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us