/உள்ளூர் செய்திகள்/தேனி/மூன்று நகராட்சிகளை மேம்படுத்த மாஸ்டர் பிளான் அம்ருத் திட்ட பணி தயார் ; துவக்க நகரமைப்புத்துறை ஏற்பாடு மூன்று நகராட்சிகளை மேம்படுத்த மாஸ்டர் பிளான் அம்ருத் திட்ட பணி தயார் ; துவக்க நகரமைப்புத்துறை ஏற்பாடு
மூன்று நகராட்சிகளை மேம்படுத்த மாஸ்டர் பிளான் அம்ருத் திட்ட பணி தயார் ; துவக்க நகரமைப்புத்துறை ஏற்பாடு
மூன்று நகராட்சிகளை மேம்படுத்த மாஸ்டர் பிளான் அம்ருத் திட்ட பணி தயார் ; துவக்க நகரமைப்புத்துறை ஏற்பாடு
மூன்று நகராட்சிகளை மேம்படுத்த மாஸ்டர் பிளான் அம்ருத் திட்ட பணி தயார் ; துவக்க நகரமைப்புத்துறை ஏற்பாடு
ADDED : செப் 18, 2025 04:29 AM

தேனி : மாவட்டத்தில் பெரியகுளம், சின்னமனுார், கூடலுார் நகராட்சிகளை மத்திய அரசின் அம்ருத் 2.0 திட்டத்தில் நகரமைப்பு பகுதிகளாக மேம்படுத்த பணிகளை துவக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இதில் மூன்று நகராட்சிகளிலும் 273.45 சதுர கி.மீ., பகுதிகளில் வளர்ச்சித்திட்டம் நகர் ஊரமைப்புத்துறை துவக்க உள்ளது.
மத்திய அரசு அம்ரூத் 2.0 என்ற திட்டத்தில் ஊரக பகுதிகளில் உள்ள நகரங்களை மேம்படுத்தவும், அங்கு எதிர்கால வளர்ச்சிக்கு தேவையான திட்டங்களான ரோடு, குடிநீர்,கழிவுநீர் கட்டமைப்பு, பசுமை பாதுகாப்பு இடங்கள், பொது சுகாதார வசதிகளை மேம்படுத்தும் பணிகளை வரும் 30 ஆண்டுகளுக்கான வளர்ச்சி என்ற இலக்குடன் திட்டம் செயல்படுத்துகிறது. குறிப்பாக மக்கள் தொகை, பொருளாதாரம், வீட்டு வசதி,போக்குவரத்து, சமூக வசதிகள், நில பயன்பாட்டிற்கான முறைப்படுத்தும் திட்டங்கள் இதில் அடங்கும். அம்ருத் 2.0 திட்டத்தில் மூன்றாம் கட்ட வளர்ச்சிப் பணிகளுக்கு 33 நகரங்களை இணைக்கப்பட்டு உள்ளன.
இதில் பெரியகுளம் நகராட்சியில் 2.10 சதுர கி.மீ., தென்கரை ,- வடகரை - கீழவடகரை, தாமரைக்குளம், மேல்மங்கலம், எண்டப்புளி ஆகிய வருவாய் கிராமங்களில் 146.153 சதுர கி.மீ.துாரம் வளர்ச்சித் திட்டத்தில் இணைகின்றன.
சின்னமனுார் நகராட்சியில் நகராட்சியில் 25.95 சதுர கி.மீ.. பூலாநந்தபுரம் முத்துலாபுரம் உத்தமபாளையம் மார்க்கையன் கோட்டை என மொத்தம் 68.02 சதுர கி.மீ., துாரப்பகுதிகள்.
கூடலுார் நகராட்சியில் மேலக்கூடலுார் - கீழக்கூடலுார் மேற்குப் பகுதி மட்டும் 57.17 சதுர கி.மீ., துாரம் இணைக்கப்பட்டுள்ளன. மொத்தம் மூன்று நகராட்சிகளிலும் 273.45 சதுர கி.மீ., துாரப் பகுதிகளில் வளர்ச்சித் திட்டப் பணிகள் நடக்க உள்ளன.நகரமைப்புத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‛கூடலுார் நகராட்சி எல்லை வரையறைக்கான முழமையான விபரம் ் அடங்கிய ஆவணங்கள் இல்லை. அந்த முழுவிபரம் கிடைத்தவுடன் வளர்ச்சித்திட்ட பணிகள், தனி மனை ஒழுங்குமுறை திட்டத்தில் கட்டட அனுமதி (எஸ்.எல்.பி.ஏ.,) நடைமுறையில் வழங்கப்படும்., என்றனர்.