/உள்ளூர் செய்திகள்/தேனி/நுா ற்றாண்டு கண்ட அரசு மருத்துவமனை மூடும் அபாயம் உத்தமபாளையத்தில் டாக்டர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் அவதிநுா ற்றாண்டு கண்ட அரசு மருத்துவமனை மூடும் அபாயம் உத்தமபாளையத்தில் டாக்டர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் அவதி
நுா ற்றாண்டு கண்ட அரசு மருத்துவமனை மூடும் அபாயம் உத்தமபாளையத்தில் டாக்டர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் அவதி
நுா ற்றாண்டு கண்ட அரசு மருத்துவமனை மூடும் அபாயம் உத்தமபாளையத்தில் டாக்டர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் அவதி
நுா ற்றாண்டு கண்ட அரசு மருத்துவமனை மூடும் அபாயம் உத்தமபாளையத்தில் டாக்டர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் அவதி
உரிய நேரத்திற்கு வராத பணியாளர்கள்
பெண் டாக்டர் இல்லாததால் பிரசவம் எப்போதாவது அத்தி பூத்தாற்போல் நடக்கிறது. ஆப்பரேஷன் தியேட்டர் மூடப்படும் நிலையில் உள்ளது. சிகிச்சைக்கு வரும் கர்ப்பிணிகளை கம்பம் அரசு மருத்துவமனைக்கும், சிலர் தேனி மருத்துவக் கல்லூரிக்கும் அனுப்பி வைக்கின்றனர். இங்குள்ள ஊசி போடும் அறை, மருந்து கட்டும் அறை, எக்ஸ்ரே பிரிவு என எதிலும் உரிய நேரத்திற்கு பணியாளர்கள் வருவதில்லை.
டாக்டர்கள் நியமிக்க வேண்டும்
அசோக் குமார், சமூக ஆர்வலர், உத்தமபாளையம்: உத்தமபாளையம் அரசு மருத்துவமனையை மாற்றான் தாய் மனப்பான்மையுடன் அதிகாரிகளும், அரசும் பார்க்கிறது. இம் மருத்துவமனைக்கு தேவையான எண்ணிக்கையில் டாக்டர்களை நியமிக்க வேண்டும். இல்லையென்றால் இந்த மருத்துவமனை இருந்தும் இல்லாதது போல ஆகி விடும். பல கிராம மக்களின் உயிர்காக்கும் மருத்துவமனை மீண்டும் முழுமையாக செயல்பட வைக்க வேண்டும்.
முடங்கிய வார்டுகள்
பரசுராம், ஆவண எழுத்தர், உத்தமபாளையம்: கழுதை தேய்த்து கட்டெறும்பு ஆன கதையாக இந்த அரசு மருத்துவமனை மாறி விட்டது. இங்குள்ள டாக்டரை குறை கூறி பயன்இல்லை. அவர்கள் என்ன செய்ய முடியும். டாக்டர்கள் நியமன அதிகாரம் கொண்ட மருத்துவ நலப்பணிகள் இயக்குனரகம் உத்தமபாளையத்தை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. எம்.டி. எம். எஸ் போன்ற முதுகலை டாக்டர்கள் ஒரு பயிற்சி களமாக பயன்படுத்தி செல்கின்றார். உள் நோயாளிகள் பிரிவு, பிரசவ வார்டு என அனைத்திலும் முடங்கிய நிலை உள்ளது. தேவையான டாக்டர்களை நியமித்து புத்துயிர் ஊட்ட வேண்டும்.
பெண் டாக்டர் வரமறுப்பு
மருத்துவ அலுவலர் ஜின்னா, பணியில் 6 டாக்டர்கள் உள்ளோம். பெண் டாகடர் யாரும் வர மறுக்கின்றனர். ரெகுலராக வெளிநோயாளிகள் பிரிவு செயல்படுகிறது. பிரசவங்கள் பார்க்க வாரம் இரண்டு நாள் பெண் டாக்டர் வருகிறார் என்றார்.


