Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/ 15 மாதங்களாக திராட்சை ஆராய்ச்சி நிலைய நிர்வாக அலுவலர் பணியிடம் காலி

15 மாதங்களாக திராட்சை ஆராய்ச்சி நிலைய நிர்வாக அலுவலர் பணியிடம் காலி

15 மாதங்களாக திராட்சை ஆராய்ச்சி நிலைய நிர்வாக அலுவலர் பணியிடம் காலி

15 மாதங்களாக திராட்சை ஆராய்ச்சி நிலைய நிர்வாக அலுவலர் பணியிடம் காலி

ADDED : ஜூன் 04, 2025 01:18 AM


Google News
கம்பம்: ஆனைமலையன்பட்டி திராட்சை ஆராய்ச்சி நிலைய தலைமை நிர்வாக அலுவலர் பணியிடம் 15 மாதங்களாக காலியாக உள்ளதால் பணிகள் தொய்வடைந்துள்ளது.

கம்பம் பள்ளத்தாக்கில் ஆண்டு முழுவதும் திராட்சை சாகுபடியாகிறது. இங்கு அதிக பரப்பில் சாகுபடி செய்வதால், விவசாயிகளுக்கு புதிய ரகங்களை அறிமுகம், நவீன தொழில்நுட்ப ஆலோசனை, சீதோஷ்ணநிலை மாற்றங்களை முன்கூட்டியே தெரிவிப்பது போன்ற பணிகள் இந்த ஆராய்ச்சி நிலையம் மூலம் கிடைக்கும் வகையில் துவக்கப்பட்டது. கோவை வேளாண் பல்கலை கட்டுப்பாட்டின் கீழ் இயங்குகிறது.

ஆனால் ஆரம்பித்ததிலிருந்தே விவசாயிகளுக்கு பயன்படுகிற மாதிரி எந்த பணியையும் இந்த ஆராய்ச்சி நிலையம் செய்யவில்லை.

புதிய ரகங்கள் அறிமுகம் செய்யவில்லை. தொழில்நுட்ப அறிவிப்புக்கள் வெளியிடுவதில்லை. சீதோஷ்ண நிலை மாற்றங்களை முன் கூட்டியே தெரிவிப்பதில்லை.

ஆனால் ஆராய்ச்சி நிலையம் தொடர்ந்து செயல்படுகிறது. இதன் தலைவராக பார்த்திபன், சரஸ்வதி, சுப்பையா போன்றவர்கள் இருந்தனர். இதில் பார்த்திபன் ஓய்வு பெற்று விட்டார். சரஸ்வதி பெரிய குளம் தோட்டக்கலை ஆராய்ச்சி மையத்திற்கு மாறுதல் ஆனார். கடைசியாக சுப்பையா கடத்த 2024 பிப்ரவரி மாதம் காலமானார்.

அதன் பின் கடந்த 15 மாதங்களாக இங்கு தலைவர் பணியிடம் காலியாக உள்ளது. பெரியகுளத்தில் பணியாற்றும் சரஸ்வதி இங்கு கூடுதல் பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளார். நிரந்தரமாக இந்த ஆராய்ச்சி நிலையத்திற்கு தலைவரை நியமிக்க வேண்டும். திராட்சை விவசாயிகள் பயன்பெறும் வகையில் ஆராய்ச்சி மையம் செயல்பட நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரியுள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us