/உள்ளூர் செய்திகள்/தேனி/ சுகாதார வளாகம் எட்டு ஆண்டுகளாக பயன்பாட்டிற்கு வராத அவலம் சங்கராபுரம் ஊராட்சியில் மக்கள் அடிப்படை வசதியின்றி தவிப்பு சுகாதார வளாகம் எட்டு ஆண்டுகளாக பயன்பாட்டிற்கு வராத அவலம் சங்கராபுரம் ஊராட்சியில் மக்கள் அடிப்படை வசதியின்றி தவிப்பு
சுகாதார வளாகம் எட்டு ஆண்டுகளாக பயன்பாட்டிற்கு வராத அவலம் சங்கராபுரம் ஊராட்சியில் மக்கள் அடிப்படை வசதியின்றி தவிப்பு
சுகாதார வளாகம் எட்டு ஆண்டுகளாக பயன்பாட்டிற்கு வராத அவலம் சங்கராபுரம் ஊராட்சியில் மக்கள் அடிப்படை வசதியின்றி தவிப்பு
சுகாதார வளாகம் எட்டு ஆண்டுகளாக பயன்பாட்டிற்கு வராத அவலம் சங்கராபுரம் ஊராட்சியில் மக்கள் அடிப்படை வசதியின்றி தவிப்பு
ADDED : செப் 09, 2025 04:47 AM

போடி: சங்கராபுரம் ஊராட்சியில் சுகாதார வளாகம் கட்டி முடித்து எட்டு ஆண்டுகளாக பயன்பாட்டிற்கு வராமல் காட்சிப்பொருளாக உள்ளது.
சின்னமனூர் ஒன்றியம், சங்கராபுரம் ஊராட்சி 2 வது வார்டு கீழப்பட்டி மேற்கு தெரு, கிழக்கு மந்தை குளம் தெரு, அழகர்சாமி கோயில் தெரு, நடுத்தெரு, கிழக்குத்தெரு உள்ளிட்ட தெருக்கள் உள்ளன. 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர்.
இங்குள்ள பெரும்பாலான தெருக்களில் கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக உள்ளன. மின் கம்பங்களில் விளக்குகள் இல்லாததால் இரவில் இருளில் மூழ்கி உள்ளன.
பழைய தண்ணீர் தொட்டி அருகே உள்ள ஓடையில் தடுப்புச் சுவர், பாலம் வசதி இல்லாததால் சாக்கடை கழிவு நீர் சீராக செல்ல முடியாமல் பாலிதீன் குப்பை கழிவுகளுடன் தேங்கி உள்ளன. ஊராட்சியில் நிலவும் பிரச்சனை குறித்து மக்கள் கருத்து:
குண்டும், குழியுமான ரோடு முத்துப்பழனி, சங்கரா புரம்: 2வது வார்டு கீழப்பட்டி மேற்கு தெருவில் ரோடு அமைத்து 20 ஆண்டுகளுக்கு மேலானதால் கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக உள்ளது. சாக்கடை வசதி இன்றி வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சீராக செல்ல முடியாமல் தேங்கி உள்ளது.
இதனால் கொசு உற்பத்தி அதிகரித்து பல்வேறு வகையில் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. சேதம் அடைந்த ரோட்டில் நடந்து செல்ல கூட சிரமம் ஏற்படுகிறது.
ரூ.5 லட்சம் மதிப்பில் ஆண்கள் சுகாதார வளாகம் கட்டி முடித்து 8 ஆண்டுகளுக்கு மேலாக பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது. கீழப்பட்டி மாரியம்மன் கோவில் தெருவில் தெரு விளக்கு இல்லை. போக்குவதற்கு இடையூறாக ரோட்டின் நடுவே மின் கம்பம் உள்ளது. தெருவில் புதிதாக ரோடு, தெரு விளக்கு வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.
வீடுகளுக்குள் வரும் பாம்புகள் அனிதா, சங்கராபுரம்: பிள்ளையார் ஓடையில் தடுப்புச்சுவர் இல்லாததால் மழைநீர் சாக்கடையில் கலந்து செல்ல முடியாத அளவிற்கு பாலிதீன் குப்பை கழிவுகள், முட் செடிகளாக உள்ளன.
இதில் உலா வரும் பாம்புகள் வீடுகளுக்குள் புகுந்து விடுவதால் மக்கள் அச்சம் அடைகின்றனர். கிழக்கு குளம் தூர்வாராததால் கழிவுநீர்தான் தேங்கி உள்ளது.
இதனால் கொசு உற்பத்தி அதிகரித்து நோய் பரவும் அபாயம் உள்ளது. ஓடையை சூழ்ந்துள்ள முட்புதர்களை அகற்றுவதோடு, தடுப்புச்சுவர் அமைத்திட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிறுபாலம் சேதம் ஆர்.சுருளி முத்து, சங்கராபுரம்: தெற்கு தெருவில் சாக்கடை சிறுபாலம் சேதம் அடைந்து பெரும் பள்ளமாக உள்ளது. ஓராண்டாகியும் சீரமைக்கப்படவில்லை.
இரவில் மின்தடையின் போது பள்ளம் தெரியாமல் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. சுகாதார வளாகம் செல்லும் ரோட்டில் மின் கம்பம் இருந்தும் விளக்கு வசதி இல்லை. இரவில் இருளில் மூழ்கி காணப்படுவதால் பெண்கள் நடந்து செல்ல அச்சம் அடைந்து வருகின்றனர்.
சாக்கடை சிறு பாலத்தை சீரமைப்பதோடு, ரோடு வசதி செய்து தர ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.