/உள்ளூர் செய்திகள்/தேனி/ரூ.2 கோடி செலவில் கட்டிய தானிய சேமிப்பு கிடங்கு பயன்பாட்டிற்கு வருகிறதுரூ.2 கோடி செலவில் கட்டிய தானிய சேமிப்பு கிடங்கு பயன்பாட்டிற்கு வருகிறது
ரூ.2 கோடி செலவில் கட்டிய தானிய சேமிப்பு கிடங்கு பயன்பாட்டிற்கு வருகிறது
ரூ.2 கோடி செலவில் கட்டிய தானிய சேமிப்பு கிடங்கு பயன்பாட்டிற்கு வருகிறது
ரூ.2 கோடி செலவில் கட்டிய தானிய சேமிப்பு கிடங்கு பயன்பாட்டிற்கு வருகிறது
ADDED : ஜன 05, 2024 04:22 AM

போடி : போடி புதூரில் மத்திய கூட்டுறவு அமைச்சகம் சார்பில் ரூ. 2 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள உணவு தானிய சேமிப்புக் கிடங்கு பணிகள் முடித்து விரைவில் பயன்பாட்டிற்கு வர உள்ளது.
நாடு முழுவதும் கூட்டுறவு சங்கங்கள் மூலம் சேமிப்புக் கிடங்குகள் அமைக்க மத்திய கூட்டுறவு அமைச்சகம் திட்டமிட்டது. முதல் கட்டமாக தேனி உள்பட 10 மாவட்டங்களில் இத் திட்டம் செயல்படுத்துகிறது. இந்திய உணவு கழகம், சில்லமரத்துப்பட்டி தொடக்க கூட்டுறவு கடன் சங்கம் மூலமாக நபார்டு வங்கி ரூ. 2 கோடி செலவில் உணவு தானிய சேமிப்பு கிடங்கு அமைக்கிறது. இதற்கு சம்மந்தப்பட்ட கூட்டுறவு சங்கம் 20 சதவீத பங்களிப்பு நிதி ரூ. 40 லட்சமும், நபார்டு வங்கி ரூ.1.60 கோடி நிதி வழங்கியது.
சில்லமரத்துப்பட்டியில் இடம் இல்லாததால் போடி தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிக்கு சொந்தமான போடி புதூரில் பயன்பாடின்றி இருந்த காபி சுத்திகரிப்பு தொழிற்சாலையில் கிடங்குகிற்கு இடம் தேர்வானது. இங்கு உள்ள 4 ஏக்கரில் 1 ஏக்கரில் உணவு தானிய சேமிப்பு கிடங்கு அமைக்கும் பணி துவங்கியது.
இக் கடனை 5 ஆண்டுகளில் திருப்பி செலுத்த வேண்டும். வாடகையாக ஆண்டுக்கு ரூ. 2 லட்சம் போடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிக்கு செலுத்த வேண்டும். இதற்காக 34 ஆண்டுகள் வாடகை ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கு சேமிப்பு கிடங்கை வாடகைக்கு விடுவதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் கடனை திரும்ப செலுத்த சில்லமரத்துப்பட்டி தொடக்க கூட்டுறவு கடன் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது.
சேமிப்பு கிடங்கு அமைக்கும் பணி கடந்த ஜூலையில் துவங்கப்பட்டது. தற்போது பணிகள் நிறைவு பெறும் நிலையில் உள்ளதால் கிடங்கி விரைவில் பயன்பாட்டிற்கு வர உள்ளது.