/உள்ளூர் செய்திகள்/தேனி/ பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல் கோலாகலம் பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல் கோலாகலம்
பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல் கோலாகலம்
பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல் கோலாகலம்
பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல் கோலாகலம்
ADDED : செப் 04, 2025 04:45 AM

பெரியகுளம்: பெரியகுளம் வணிக வைசியகுல சங்கத்தில் நடந்த பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல் உற்ஸவத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
பெரியகுளம் தென்கரை வணிக வைசியகுல அபிவிருத்தி சங்கத்தில் நடந்த பிட்டு திருவிழாவில், நடராஜர், சிவகாமியம்மன் வணிகவைசிய குல சங்கத்தில் எழுந்தருளினர். ஆன்மிகச் சொற்பொழிவில் அர்ச்சகர் துரைக்கண்ணன் பேசுகையில்: வணிகவைசியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர் சிவபக்தை வந்திபாட்டி. மதுரை வைகையாற்றில் கரை உடைந்தது. பாண்டிய மன்னர் கரையை உயர்த்த வீட்டுக்கு ஒருவர் கரையை உயர்த்த வரவேண்டும் என உத்தர விட்டார்.
'சிவனேகதி' என வாழ்ந்த பிட்டு வியாபாரம் செய்யும் வந்திபாட்டிக்கு, வயோதிகம் காரணமாக கரையை உயர்த்துவதில் சங்கடம் ஏற்பட்டது. சிவபெருமானை நினைத்து மனமுறுகினார்.
சிவபெருமான் சிறுவன் வேடத்தில் வந்தி பாட்டியிடம் வேலையாளாக வந்தார். கூலிக்கு பதிலாக உதிர்ந்த பிட்டினை உண்டார்.
வைகையாற்று கரையில் வேலை செய்யாமல் ஆட்டம், பாட்டமாக விளையாடினார். இதனை பார்த்த பாண்டிய மன்னன், அவரை பிரம்பால் அடித்தார். உலகிலுள்ள அனைவருக்கும் பிரம்பு அடி விழுந்தது. மன்னர், சிவபெருமானை வணங்கினார். இந்த திருவிளையாடலை அர்ச்சகர்கள் பிட்டுக்கு மண் சுமந்த லீலையாக நடத்தினர். சுவாமி, அம்மன் முக்கிய வீதிகளில் வலம் வந்தனர்.
பாராட்டு விழா: மாவட்ட தலைவர் சுந்தரவடிவேல், 10 ம் வகுப்பு, பிளஸ் 2 வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். பக்தர்களுக்கு பிட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை தலைவர் பாலசுப்பிரமணியன், செயலாளர் மணிவண்ணன், பொருளாளர் கணேசன், அலுவலர் சரவணக்குமார் உட்பட பலர் செய்திருந்தனர்.