Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/துார்வாராததால் மழை பெய்தும் நீர் தேங்காத பிச்சம்பட்டி கண்மாய் ஆண்டிபட்டி விவசாயிகள் ஏமாற்றம்

துார்வாராததால் மழை பெய்தும் நீர் தேங்காத பிச்சம்பட்டி கண்மாய் ஆண்டிபட்டி விவசாயிகள் ஏமாற்றம்

துார்வாராததால் மழை பெய்தும் நீர் தேங்காத பிச்சம்பட்டி கண்மாய் ஆண்டிபட்டி விவசாயிகள் ஏமாற்றம்

துார்வாராததால் மழை பெய்தும் நீர் தேங்காத பிச்சம்பட்டி கண்மாய் ஆண்டிபட்டி விவசாயிகள் ஏமாற்றம்

ADDED : ஜன 11, 2024 03:58 AM


Google News
Latest Tamil News
ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி பகுதியில் போதிய மழை பெய்தும் பிச்சம்பட்டி கண்மாய் நீர் நிரம்பாததால் விவசாயிகள் ஏமாற்றம் அளித்துள்ளது.

100 ஏக்கர் பரப்புள்ள இக்கண்மாய்க்கு வேலப்பர் கோயில் மலைப்பகுதியில் பெய்யும் மழையால் நாகலாறு ஓடை வழியாக நீர் வரத்து கிடைக்கிறது. ஏத்தக்கோயில், சித்தயகவுண்டன்பட்டி மலைப்பகுதிகளில் இருந்து வரும் மழை நீரும் அனுப்பப்பட்டி, போடிதாசன்பட்டி ஓடை வழியாக கண்மாயில் சேர்கிறது. ஆண்டிபட்டி பகுதியில் கடந்த சில மாதங்களில் அடுத்தடுத்து பலத்த மழை பெய்தும் இக் கண்மாய் நிரம்பவில்லை. பல ஆண்டுகளாக தூர் வாரப்படாமல் புதர் மண்டியிருக்கும் கண்மாயின் பள்ளங்களில் மட்டும் தற்போது மழை நீர் தேங்கியுள்ளது. பல ஆண்டுகளாக நீர் தேங்காத கண்மாய் குறித்து பொதுப்பணித்துறை, ஊராட்சி நிர்வாகம் அக்கறை கொள்ளவில்லை. பல கிராமங்களுக்கு நிலத்தடி நீர் ஆதாரமாக விளங்கும் இக்கண்மாயில் நீர் தேங்குவதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டும். கண்மாய் நிலவரம் குறித்து இப்பகுதி மக்கள் கூறியதாவது:

கால்வாய் பராமரிப்பு இல்லை


எஸ். தமிழ்ச் செல்வன், பிச்சம்பட்டி: மேற்கு தொடர்ச்சி மலையிலிருந்து வரும் நாகலாறு ஓடையில் கதிர்நரசிங்கபுரம் அருகே தடுப்பணை அமைத்து அங்கிருந்து மற்றொரு கால்வாய் மூலம் பிச்சம்பட்டி கண்மாக்கு தண்ணீர் வரும்படி அமைக்கப்பட்டுள்ளது. கடந்த பல ஆண்டுகளாக இந்த கால்வாய் பராமரிப்பு இல்லை. இதனால் ஓடையில் வரும் நீர் கால்வாய் வழியாக கண்மாய்க்கு வந்து சேர்வதில்லை. நீர்வரத்து கால்வாயில் பல இடங்களில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இக்கண்மாய்க்கு கிடைக்க வேண்டிய நீர் ஓடை வழியாக மற்ற கண்மாய்களுக்கு செல்கிறது. ஓடையில் வரும் நீர் அனைத்து கண்மாய்களுக்கும் சம அளவில் செல்லும்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆக்கிரமிப்பால் சுருங்கிய வாய்க்கால்


பழனிச்சாமி, பிச்சம்பட்டி: நீர் வரும் வாய்க்காலில் இருபுறமும் நிலம் வைத்திருப்பவர்கள் ஆக்கிரமித்து வாய்க்காலின் அளவை சுருக்கி விட்டனர் மாயாண்டிபட்டி அருகே தடுப்பணையும் மூடி கிடப்பதால் பெரிய ஓடையில் நீர் வந்தாலும் பிச்சம்பட்டி கண்மாய்க்கு கிடைப்பதில்லை. கண்மாயின் கிழக்கு பகுதியில் உள்ள நீர் வரத்து ஓடைகளும் புதர் மண்டி கிடப்பதால் முழு அளவில் நீர் வந்து சேர்வதில்லை. கடந்த காலங்களில் கண்மாய் நீரால் 120 ஏக்கர் நேரடி பாசனம் இருந்தது. கண்மாயை நம்பி உள்ள கிராமங்களில் நிலத்தடி நீரால் ஆண்டு முழுவதும் விவசாயம் செய்தனர். கண்மாயில் நீர் நிரம்பாததால் இறவை பாசன விவசாய நிலங்கள் பல ஏக்கர் மானாவாரி நிலங்களாக மாறிவிட்டன. கண்மாயை ஒட்டி உள்ள கிராமங்களில் நெல் சாகுபடியே இல்லை.

துார்வாரி நீர் தேக்க வேண்டும்


எஸ்.ஆர்.சம்பத், ஆண்டிபட்டி: கண்மாயில் முழு அளவில் நீர் தேங்கினால் இப் பகுதியில் 3 ஆண்டுகளுக்கு நிலத்தடி நீர் தேவை பூர்த்தியாகும். கண்மாயில் தேங்கும் நீரால் ஆண்டிபட்டி, கொண்டமநாயக்கன்பட்டி, சில்க்குவார்பட்டி, டி.வி.ரங்கநாதபுரம் கிராமங்களில் நிலத்தடி நீர் ஆதாரம் மேம்படும். கிணறுகள், போர்வெல்களில் ஆண்டு முழுவதும் பாதிப்பில்லாத நீர் சுரப்பு இருக்கும். கடந்த காலங்களில் கண்மாய் நீர் மறுகால் சென்று வைகை ஆற்றில் சேரும். வைகை ஆற்றில் நீரை எதிர்த்து கண்மாய்க்கு மீன்கள் நீந்தி வரும். கண்மாயிலும் மீன்கள் வளர்ப்பு இருந்தது. கடந்த பல ஆண்டுகளாக பராமரிப்பில்லாத கண்மாய் விவசாயிகளுக்கு மட்டுமின்றி பல கிராம மக்களுக்கும் ஏமாற்றம் அளித்துள்ளது. கண்மாய் நீர்த்தேக்கப்பகுதி, நீர் வரத்து பகுதிகளை முழுமையாக சர்வே செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வாரும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். வரும் காலங்களில் கண்மாயில் முழு அளவில் நீரைத்தேக்கும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us