/உள்ளூர் செய்திகள்/தேனி/ முதியோர்களை அலைக்கழிக்கும் ஆதிதிராவிடர் நலத்துறை உதவித்தொகை கிடைக்காமல் அவதி முதியோர்களை அலைக்கழிக்கும் ஆதிதிராவிடர் நலத்துறை உதவித்தொகை கிடைக்காமல் அவதி
முதியோர்களை அலைக்கழிக்கும் ஆதிதிராவிடர் நலத்துறை உதவித்தொகை கிடைக்காமல் அவதி
முதியோர்களை அலைக்கழிக்கும் ஆதிதிராவிடர் நலத்துறை உதவித்தொகை கிடைக்காமல் அவதி
முதியோர்களை அலைக்கழிக்கும் ஆதிதிராவிடர் நலத்துறை உதவித்தொகை கிடைக்காமல் அவதி
ADDED : செப் 21, 2025 12:30 AM
தேனி: புதிரை வண்ணார் நல வாரியத்தில் பதிவு செய்தவர்களுக்கு மூன்று ஆண்டுகளாக முதியோர் உதவித்தொகை நிறுத்தி வைத்து அதிகாரிகள் அலைக்கழிப்பதாக பயனாளிகள் புலம்பி வருகின்றனர்.
ஆதிதிராவிடர் நலத்துறையினர் கீழ் புதிரை வண்ணார் நல வாரியம் இயங்குகிறது. இந்த வாரியம் மூலம் கல்வி, முதியோர் உதவித்தொகை, விபத்து நிவாரணம் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. ஆனால், தேனி மாவட்டத்தில் இந்தஉதவித்தொகை, நிவாரணங்கள் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளதால், வாரியத்தில்பதிவு செய்தவர்கள் அடிக்கடி கலெக்டர் அலுவலகத்திற்கு வருகின்றனர்.
இதுபற்றி புதிரைவண்ணார் அமைப்பை சேர்ந்ததங்கபாண்டியன் கூறுகையில், 'இந்த வாரியத்தில் பதிவு செய்திருந்த சுமார் 60க்கும் மேற்பட்டோர் 6 ஆண்டுகளாக முதியோர் உதவித்தொகை பெற்று வந்தனர். ஆனால் 3 ஆண்டுகளாக முதியோர் உதவித்தொகை, விபத்து நிவாரணம் உள் ளிட்டவை வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்காக ஆதிதிராவிடர் நல அலுவலகத்திற்கு சென்றால் அலைக்கழிப்பு செய்கின்றனர்.
அதிகாரிகள் மாறிவிட்டனர், அரசுக்கு அறிக்கை அனுப்பவில்லைஎன கூறுகின்றனர். முதியோர் உதவித்தொகை, உள்ளிட்டவை கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். இது தொடர்பாக மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சம்பூரணத்தை அலைபேசியில் தொடர்பு கொண்ட போது அவர் பதில் அளிக்கவில்லை.