ADDED : ஜூலை 04, 2025 03:41 AM

தேனி: அல்லிநகரம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள தொடக்ககல்வி டி.இ.ஓ., அலுவலகம் முன் ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் செல்லதுரை தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், தொடக்க கல்வித்துறையில் முறைகேடாக வழங்கப்பட்டுள்ள நிர்வாக மாறுதல் ஆணைகளை ரத்து செய்யவும்,
ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கி பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும், விதிகளின் படி பணி நீட்டிப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். நிர்வாகிகள் கிருஷ்ணசாமி, ராம்குமார், சுருளியம்மாள், கள்ளர் பள்ளி சங்க நிர்வாகி தீனன், உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் மோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.